Published : 19 Sep 2025 08:40 AM
Last Updated : 19 Sep 2025 08:40 AM

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

புதுடெல்லி: நேபாளத்​தில் அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடை​பெற்​றது. இதில் வன்​முறை வெடித்​தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி வில​கி​னார். இதையடுத்​து, இடைக்​கால அரசின் பிரதம​ராக உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி​யேற்​றார்.

இந்​நிலை​யில் பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “நே​பாள இடைக்​கால அரசின் பிரதமர் சுசீலா கார்​கி​யுடன் தொலைபேசி​யில் பேசினேன். அப்​போது, சமீபத்​தில் நடந்த வன்​முறை​யில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொண்​டேன்.

மேலும் அந்​நாட்​டில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை நிலை​நாட்ட அவர் எடுத்து வரும் முயற்​சிக்கு இந்​தியா ஆதரவு அளிக்​கும் என உறுதி அளித்​துள்​ளேன். மேலும் நாளை (வெள்​ளிக்​கிழமை) தேசிய தினம் கொண்​டாட உள்ள நேபாள மக்​களுக்​கும் பிரதமருக்​கும் வாழ்த்​துகளை தெரி​வித்​தேன்​” என பதி​விட்​டுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x