Published : 19 Sep 2025 08:36 AM
Last Updated : 19 Sep 2025 08:36 AM

மாலத்தீவு பத்திரங்களை திருப்பி செலுத்தும் காலக்கெடுவை நீட்டித்தது இந்தியா

புதுடெல்லி: மாலத்​தீ​வில் உள்ள இந்​திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாலத்​தீவு அரசின் வேண்​டு​கோளின் பேரில் 50 மில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​புள்ள கரு​வூல பத்​திரங்​களை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடு மீண்டும் ஓராண்​டுக்கு நீட்​டிக்​கப்​பட்​டது.

மார்ச் 2019 முதல் இந்​திய அரசு இது​போன்ற பல கரு​வூல பத்​திரங்​களை வாங்​கு​வதன் மூலம் ஆண்​டு​தோறும் மாலத்​தீவுக்கு வட்டி இல்லா நிதி உதவியை தொடர்ச்​சி​யாக வழங்கி வரு​கிறது.

இந்த நிலை​யில், மாலத்​தீவு அரசு கரு​வூலப் பத்​திரங்​களை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடு நேற்​றுடன் முடிவடைந்​தது. இந்த நிலை​யில் இரு​நாடு​களுக்​கும் இடையி​லான தனித்​து​வ​மான ஏற்​பாட்​டின் கீழ் மாலத்​தீவு​களுக்​கான அவசர நிதி உதவி​யாக பத்​திரங்​களை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடுவை மேலும் ஓராண்டு நீட்டிக்க இந்​தியா முடிவு செய்​துள்​ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x