Published : 19 Sep 2025 08:12 AM
Last Updated : 19 Sep 2025 08:12 AM

ஆந்திர பேரவையில் ஜிஎஸ்டி திருத்தத்துக்கு ஒருமனதாக வரவேற்பு

அமராவதி: ஆந்​திர சட்​டப்​பேர​வை​யின் மழைக்​கால கூட்​டத்​தொடர் நேற்று தொடங்​கியது. சபா​நாயகர் அய்​யண்ண பாத்​ருடு அவையை தொடங்கி வைத்​தார். இக்கூட்​டத்​தில் ஜிஎஸ்டி சீர்​திருத்த சட்​டம் குறித்து விவா​திக்​கப்​பட்​டது.

இது குறித்து முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், “ஜிஎஸ்டி மறுசீரமைப்பை நான் வரவேற்​கிறேன். வளர்ச்சி பணி​களுக்​காக வரி​யி​னால் வரு​மானம் வரு​கிறது. அந்த வரு​மானத்தை பெருக்​கி, அதன் மூலம் மக்​களுக்கு சேவை புரிய வேண்​டும்.

ஆனால், மாநில வளர்ச்சி குறித்து யோசிக்​காமல் ஆட்சி புரிபவர்​கள் அது குறித்து பேச கூட தகு​தி​யற்​றவர்​கள் என்​பது எனது கருத்​து. கடன்​பட்டு மாநிலம் வளர்ச்​சி​யடைய கூடாது.

நிதி நெருக்​கடி வந்​தா​லும், மாநிலம் மற்​றும் நாட்​டின் நலனே முக்​கி​யம். புதிய சீர்​திருத்​தத்​தால் ரூ. 2 லட்​சம் கோடி வரை ஆதா​யம் வரும் என எதிர்​பார்க்​கிறேன். இதனால் பிரதமர் மோடிக்கு நன்​றி​யினை தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x