Published : 19 Sep 2025 07:09 AM
Last Updated : 19 Sep 2025 07:09 AM

சென்னை உட்பட 5 நகரங்களில் சோதனை: ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை

அமராவதி: ஆந்​திர மது​பான ஊழல் வழக்கு தொடர்​பாக நேற்று அமலாக்​கத் துறை விசா​ரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்​ளிட்ட 5 நகரங்​களில் அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை பறி​முதல் செய்​துள்​ளனர்.

ஆந்​தி​ரா​வில் கடந்த ஜெகன் மோகன் ரெட்​டி​யின் ஆட்சி காலத்​தில் ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடந்​த​தாக சிறப்பு ஆய்​வுக் குழு​வின் விசா​ரணை​யில் தெரிய வந்​தது. இது தொடர்​பாக இது​வரை 29 பேரை குற்​ற​வாளி​யாக​வும், 19 நிறு​வனங்​களுக்கு இதில் தொடர்​புடைய​தாக​வும் சிறப்​புக் குழு குற்​றப்​பத்​திரி​கையை சமர்ப்​பித்​துள்​ளது.

இதில், ராஜம்​பேட்டை ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் எம்​.பி. மிதுன் ரெட்​டி, முன்​னாள் சந்​திரகிரி தொகுதி எம்​எல்ஏ செவி ரெட்டி பாஸ்​கர் ரெட்டி உட்பட 12 பேரை கைது செய்து விசா​ரித்தது. இதில் 4 பேருக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை​யின் கீழ் முன்​ஜாமீன் வழங்கி உள்​ளது. மீத​முள்​ளவர்​களிடம் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வந்​தது.

இவ்​வழக்கு தொடர்​பாக நேற்று டெல்​லி, சென்​னை, ஹைத​ரா​பாத், விசாகப்​பட்​டினம், திருப்​ப​தி, சித்​தூர் மற்​றும் பெங்​களூரு ஆகிய இடங்​களில் அமலாக்​கத் துறையை சேர்ந்த 20 குழு​வினர் சோதனை மேற்​கொண்​டனர்.

சுமார் 7 மணி நேரம் வரை நடந்த இந்த சோதனை​யில் பல முக்​கிய ஆவணங்​கள், வங்கி கணக்​கு​கள் போன்​றவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசி​யல்​வா​தி​யின் பினாமி​யான பிஆர்கே ரெட்டி என்​பவருக்கு சொந்​த​மான மார்கா க்ரூப் அலு​வல​கத்​தி​லும் நேற்று அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இந்​நிறு​வனத்​தின் கிளை சென்​னை​யில் உள்​ள​தால் அங்​கும் சோதனை நடத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x