Published : 18 Sep 2025 09:08 AM
Last Updated : 18 Sep 2025 09:08 AM

ஆயுத சண்டை நிறுத்தத்துக்கு தயார்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

புதுடெல்லி: “ஒரு மாதம் சண்டை நிறுத்​தம் செய்​கிறோம். இந்​தக் கால கட்​டத்​தில் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்” என்று மத்​திய அரசுக்கு மாவோ​யிஸ்ட்​கள் கடிதம் அனுப்​பிய​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​கள் தொடர்ந்து வன்​முறை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வரும் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா திட்​ட​வட்​ட​மாக கூறி​யுள்​ளார். அதன்​படி, உள்​ளூர் போலீ​ஸார், கோப்ரா கமாண்​டோக்​கள், சிஆர்​பிஎப் வீரர்​கள் என பெரும் பட்​டாளம், மாவோ​யிஸ்ட் ஒழிப்​புப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றன.

இந்த சூழ்​நிலை​யில், இந்​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட மத்​திய மாவோ​யிஸ்ட் செய்​தித் தொடர்​பாளர் அப்ஹே என்​பவர், மத்​திய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி கடிதம் அனுப்​பி​யுள்​ளார். அந்​தக் கடிதம் தற்​போது ஊடகங்​களில் வெளி​யாகி உள்​ளது.

அந்​தக் கடிதத்​தில் அப்ஹே கூறி​யிருப்​ப​தாவது: எங்​கள் ஆயுத போராட்​டத்தை ஒரு மாத காலம் நிறுத்தி வைக்​கிறோம். இந்த கால கட்​டத்​தில் அரசு நியமிக்​கும் குழு​வினருடன் அமைதி பேச்​சு​வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணலாம்.

மேலும், சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க அனு​ம​திக்க வேண்​டும். இந்​தக் காலக் கட்​டத்​தில் போலீ​ஸாரின் தொந்​தரவு இருக்க கூடாது. என்​க​வுன்ட்​டர் நடவடிக்​கையை நிறுத்தி வைக்க வேண்​டும். அத்​துடன் அரசி​யல் கைதி​களை விடுவிக்க வேண்​டும். இந்​தப் பேச்​சு​வார்த்தை அர்த்​த​முள்​ள​தாக நடக்க வேண்​டும்.

இவ்​வாறு அந்​தக் கடிதத்​தில் கூறப்​பட்​டுள்​ளது. மேலும், கடிதத்​துக்கு பதில் அளிக்க வசதி​யாக இ மெயில் முகவரியை​யும் அப்ஹே கொடுத்​துள்​ளார். சத்​தீஸ்​கர் அதி​காரி​கள் கூறும்​போது, “மாவோ​யிஸ்ட்​கள் பலர் கொல்​லப்​பட்​ட​தால் அந்த அமைப்பு தற்​போது வலு​விழந்​துள்​ளது.

எனவே, மாவோ​யிஸ்ட் அமைப்​பினரை மீண்​டும் ஒன்று கூட்​டு​வதற்​கும் சதி தீட்​டு​வதற்​கும் வசதி​யாக அமைதி பேச்​சு​வார்த்தை என்ற பெயரில் நாடக​மாடு​கிறதோ என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. தவிர அமைதி பேச்​சு​வார்த்தை கடிதம் உண்​மை​யாக இருந்​தால், மிகப்​பெரிய மாற்​றம் நிகழும்” என்​றனர்.

மத்​திய அரசு அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘மாவோ​யிஸ்ட்​கள் அமைதி பேச்​சு​க்கு முன்​வரு​வது வரவேற்​கத்​தக்​கது. இந்த பேச்​சு​வார்த்​தை​யில் மனித உரிமை ஆர்​வலர்​கள், சமூக சேவகர்​களை மத்​தி​யஸ்​தர்​களாக பயன்​படுத்​தலாம். எனினும், 2026 மார்ச் மாதத்​துக்​குள் நாடு முழு​வதும் மாவோ​யிஸ்ட்​கள், நக்​சல்​கள் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்​திய அரசு அளித்​துள்ள உறு​தி​மொழி​யில் எந்த மாற்​ற​மும் இல்​லை’’ என்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x