Published : 18 Sep 2025 07:25 AM
Last Updated : 18 Sep 2025 07:25 AM

இண்டியா கூட்டணி: ஆர்ஜேடி கட்சி மீது ஒவைசி குற்றச்சாட்டு

பாட்னா: ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யின் தலை​வரும் ஹைத​ரா​பாத் எம்​.பி.​யு​மான அசாதுதீன் ஒவைசி தங்​களின் பிஹார் தேர்​தல் திட்​டம் குறித்து கூறியதாவது:

பிஹார் தேர்​தலில் நாங்​கள் போட்​டி​யிட உள்​ளோம். இத்​தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் இணைந்து போட்​டி​யிடு​வது குறித்து ஆர்​ஜேடி தலை​வர் லாலு​வுக்கு 2 முறை​யும் அவரது மகன் தேஜஸ்விக்கு ஒரு முறை​யும் கடிதம் எழு​தினோம். இது​வரை பதில் இல்​லை.

6 தொகு​தி​களை ஏற்​றுக்​கொள்ள நாங்​கள் தயா​ராக உள்​ளோம். ஆட்​சிக்கு வந்​தால் அமைச்​சர​வை​யில் இடம் வேண்​டாம், சீமாஞ்​சல் வளர்ச்சி வாரி​யம் ஏற்​படுத்​தி​னால் போதும் என்று கூறினோம். இவ்வாறு அசாதுதீன் ஓவைசி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x