Published : 18 Sep 2025 07:21 AM
Last Updated : 18 Sep 2025 07:21 AM

பாகிஸ்தானை கண்ணிமைக்கும் நேரத்தில் அடிபணிய வைத்த ராணுவ வீரர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தானை நமது வீரர்​கள் அடிபணிய வைத்​ததை, ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் கமாண்​டரே ஒப்​புக் கொண்டுள்ளார்’’ என்று இந்​திய ராணுவ வீரர்​களுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்​டி​னார்.

காஷ்மீரின் பஹல்​காம் தாக்​குதலில், பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தி​ய​தில், 26 சுற்​றுலா பயணி​கள் கொல்​லப்​பட்​டனர். அதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தான் மீது இந்​தியா நடத்​திய ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தீவிர​வாத முகாம்​கள், நூர் கான் விமானம் உட்பட பல கட்​டமைப்​பு​கள் நாசமடைந்​தன.

இந்​நிலை​யில், ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் மசூத் இலி​யாஸ் காஷ்மீரி 2 நாட்​களுக்கு முன்​னர் வெளி​யிட்ட வீடியோ​வில், ‘‘ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் ஜெய்ஷ் அமைப்​பின் தலை​வர் மவுலானா மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் சிதைக்​கப்​பட்​டனர்’’ என்று கூறி​யிருந்​தார்.

இந்​நிலை​யில், பிரதமர் மோடி நேற்று 75-வது பிறந்த தினத்தை கொண்​டாடி​னார். இதை முன்​னிட்டு மத்​திய பிரதேச மாநிலம் தார் பகு​தி​யில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது:

ஆபரேஷன் சிந்​தூர் மூலம் கண்​ணிமைக்​கும் நேரத்​தில் பாகிஸ்​தானை இந்​திய வீரர்​கள் அடிபணிய வைத்​தனர். இதை தீவிர​வா​தியே ஒப்​புக் கொண்டு வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதை இந்த நாடும் உலக​மும் பார்த்​தது. பாகிஸ்​தானி தீவிர​வாதி தன்​னுடைய நிலை​மையை கூறி கதறுகிறார். இது புதிய இந்​தி​யா, யாருடைய அணுஆ​யுத மிரட்​டலுக்​கும் பயப்​ப​டாத இந்​தி​யா.

பாரத தாயின் பாது​காப்​புக்கு இந்த நாடு முன்​னுரிமை அளிக்​கிறது. நமது சகோ​தரி​கள், மகள்​கள் 26 பேரின் சிந்​தூரை பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் அழித்​தனர். அதற்கு பதிலடி​யாக ஆபரேஷன் சிந்​தூர் மூலம் தீவிர​வா​தி​களின் முகாம்​களை அழித்​தோம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

கடந்த மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் மூலம் இந்​திய வீரர்​கள் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​பின் முக்​கிய மைத்​தின் மீது தாக்​குதல் நடத்​தினர். இதில் மசூத் அசா​ரின் குடும்​பத்​தினர் 10 பேர் கொல்​லப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x