Published : 18 Sep 2025 07:15 AM
Last Updated : 18 Sep 2025 07:15 AM

நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பரேலி: உ.பி பரேலி​யில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்​டின் மீது துப்​பாக்கிக் சூடு நடத்​திய இரு​வர் என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

பாலிவுட் நடிகை திஷா பதானி​யின் வீடு உத்தர பிரதேசம் பரேலி​யில் உள்​ளது. இங்கு கடந்த 12-ம் தேதி மர்ம நபர்​கள் இரு​வர் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதில் யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. துப்​பாக்கிச் சூடு நடத்​தி​ய​வர்​கள் கோல்டி பிரார் மற்​றும் ரோஹித் கோதாரா கும்​பலைச் சேர்ந்த ரவீந்​திரா, அருண் என தெரிய​வந்​தது.

ஆன்​மீக தலை​வர்​கள் குறித்து நடிகை திஷா பதானி விமர்​சித்​த​தால், அவர் வீட்​டின் மீது தாக்​குதல் நடத்​தி​ய​தாக கோல்டி பிரார் மற்​றும் ரோஹித் கோதாரா கும்​பல் தெரி​வித்​தது. இந்​நிலை​யில் துப்​பாக்கிச் சூடு நடத்​திய ரவீந்​திரா மற்​றும் அருண் ஆகியோர் காசி​யா​பாத் அருகே இருந்​த​போது அவர்​களை உ.பி. அதிரடிப்​படை, டெல்லி போலீ​ஸார் சுற்றி வளைத்​தனர். அப்​போது நடை​பெற்ற துப்​பாக்கி சூட்​டில் இரு​வரும் படு​கா​யம் அடைந்​தனர். மருத்​து​வ​மனை​யில் அவர்​கள் இரு​வரும் இறந்​தனர் என போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x