Published : 18 Sep 2025 07:09 AM
Last Updated : 18 Sep 2025 07:09 AM

பசுவதை தடை சட்டத்தை வலியுறுத்தி பிஹாரில் சங்கராச்சாரியார் கட்சி போட்டி

புதுடெல்லி: உத்​த​ராகண்​டின் சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் பீடம், 5 பீடங்​களில் ஒன்​றாக கருதப்​படு​கிறது. இதன் தலை​வர் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்த் சரஸ்​வ​தி.

இவர் சங்​க​ராச்​சா​ரி​யார்​களில் ஒரு​வ​ராக​வும் கருதப்​படு​கிறார். இவர் துறவி​கள் சார்​பில், புதி​தாக ஓர் அரசி​யல் கட்சி தொடங்க உள்​ளார். இக்​கட்சி சார்​பில் பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் 243 தொகு​தி​களி​லும் வேட்​பாளர்​களை நிறுத்த உள்​ளார். இதற்கு முன்​பாக பிஹாரின் மதுபனியி​லிருந்து இவர் யாத்​திரை தொடங்​கி​யுள்​ளார்.

இதன் தொடக்​கத்​தில் அவர் பேசுகை​யில், ‘‘இந்​தி​யா​வில் இருந்து மாட்​டிறைச்சி ஏற்​றுமதி நிறுத்​தப்​பட​வில்​லை. தற்​போதைய பாஜக கூட்​டணி ஆட்​சி​யிலும் இது அதி​கரித்து வரு​கிறது. இந்த விஷ​யத்​தில் அரசி​யல் கட்​சிகளிடம் நேர்மை இல்​லை. பசு இறைச்சி நிறு​வனங்​கள், அரசி​யல் கட்​சிகளுக்கு நன்​கொடை அளிப்​பது இதற்கு காரண​மாக உள்​ளது.

ஒரு​புறம், பிரதமர் நரேந்​திர மோடி தனது கட்சி பசுப் பாது​காப்​புக்கு ஆதர​வாக இருப்​ப​தாக கூறுகிறார். மறு​புறம், மாட்​டிறைச்சி ஏற்​றுமதி அதி​கரித்து வரு​கிறது. இது மிக​வும் அதிர்ச்​சி​யூட்​டு​வ​தாக உள்​ளது. எனவே, பசு பக்​தர்​களை பிஹாரின் அனைத்து தொகு​தி​களி​லும் எனது கட்சி சார்​பில் நிறுத்த உள்​ளேன்.

டெல்​லி​யில் தேசிய கட்​சிகளின் அலு​வல​கங்​களுக்கு நேரில் சென்று பசுவை தேசத்​தின் தாயாக அறிவிக்க வலி​யுறுத்​தினேன். ஆனால் இது​வரை எந்த கட்​சி​யும் இந்த விஷ​யத்​தில் தெளி​வான நிலைப்​பாட்டை தெரிவிக்​க​வில்​லை” என்​றார்.

இவர், உ.பி.​யின் பிர​தாப்​கர் மாவட்​டத்​தில் உள்ள பிரம்​மன்​பூர் கிராமத்​தில் பிறந்​தார். வாராணசி​யில் உள்ள சம்​பூர்​ணானந்த் சம்​ஸ்​கிருத பல்​கலைக்​கழகத்​தில் சாஸ்​திரி மற்​றும் ஆச்​சார்யா கல்​வி​யில் பட்​டம் பெற்​றார். அப்​போது மாணவர் அரசி​யலில் நுழைந்​து, 1994-ம் ஆண்டு மாணவர் சங்​கத் தேர்​தலில் வெற்றி பெற்​றார். இவர் துற​வி​யான பிறகு பாஜக ஆளும் மாநில அரசுகள் மற்​றும் மத்​திய அரசுக்கு எதி​ராக அவ்​வப்​போது சர்ச்​சைக்​குரிய கருத்​துகளை கூறிய​தால்​ பிரபல​மா​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x