Published : 17 Sep 2025 08:42 AM
Last Updated : 17 Sep 2025 08:42 AM

பிஹார் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

புதுடெல்லி: பிஹாரில் வரவிருக்​கும் தேர்​தலுக்கு முன்​ன​தாக 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன்​கள் அனைத்​துக்​கும் வட்டி தள்​ளு​படி செய்​யப்​படும் என அம்​மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறி​வித்​துள்​ளார். வரவிருக்​கும் தேர்​தலை மனதில் கொண்டு அவர் இந்த சலுகை அறி​விப்பை வெளியிட்டுள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது: இப்​போது அனைத்து விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கும் மாணவர் கடன் அட்டை திட்​டத்​தின் கீழ் கல்விக் கடன் வட்டி இல்​லாத​தாக இருக்​கும் என்​பதை உங்​களுக்கு தெரி​விப்​ப​தில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

அதேபோன்று மாணவர்​கள் கல்வி கடனை திருப்​பிச் செலுத்​து​வதற்​கான கால​மும் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, ரூ.2 லட்​சம் வரை கல்வி கடன் பெற்ற மாணவர்​கள் அதனை திருப்​பிச் செலுத்​துவதற்​கான காலம் இப்​போது ஐந்து ஆண்​டு​களாக இருக்​கும் நிலை​யில் அது ஏழு ஆண்​டு​களாக (84 மாத தவணை​கள்) நீட்​டிக்​கப்​படும்.

அதேபோன்​று, ரூ.2 லட்​சத்​துக்​கும் மேல் கடன் வாங்​கிய​வர்​கள் திருப்பி செலுத்​தும் காலம் ஏழு ஆண்​டு​களி​லில் இருந்து 10 ஆண்​டு​களாக (120 மாத தவணை​கள்) அதி​கரிக்​கப்​படும். பிஹார் மாநிலத்தை பொறுத்​தவரை அதி​க​மான மாணவர்​கள் உயர்​கல்வி பெறு​வதை உறுதி செய்​வதே எங்​களின் நோக்​க​மாக உள்​ளது.

எனவே உயர்​கல்விக்​கான கல்விக் கடனில் வழங்​கப்​படும் இந்த சலுகைகள் மாணவர்​களின் மன உறு​தியை அதி​கரிக்​கும் என்பதுடன் அவர்​கள் அதிக உற்​சாகத்​துட​னும் அர்ப்​பணிப்​புட​னும் உயர்​கல்​வியைத் தொடர உதவும்.

கல்வி வாய்ப்​பு​களை விரிவு படுத்​து​வதற்​கும், பிஹார் இளைஞர்​களை மேம்​படுத்​து​வதற்​கும் ஒரு படி​யாக இந்த முடிவை மாநில அரசு எடுத்​துள்​ளது. இது, அவர்​களின் சொந்த எதிர்​காலத்தை மட்​டுமல்ல, மாநிலம் மற்​றும் நாட்​டின் எதிர்​காலத்​தை​யும் வடிவ​மைக்​கிறது. இவ்​வாறு நிதிஷ் குமார் தெரி​வித்​தார்.

உயர்​கல்வி பயில ரூ.4 லட்​சம் வரை கல்விக் கடன் வழங்​கப்​படு​கிறது. தற்​போது இதற்​கு, பொது விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு 4% வட்​டி​யும், பெண்​கள்​, ​மாற்​றுத்​திற​னாளி​கள்​ மற்​றும்​ திருநங்​கை விண்​ணப்​ப​தா​ரர்​களுக்​கு வெறும்​ 1% வட்​டி​யும்​ வசூலிக்​கப்​படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x