Last Updated : 17 Sep, 2025 08:04 AM

 

Published : 17 Sep 2025 08:04 AM
Last Updated : 17 Sep 2025 08:04 AM

கர்நாடக மாநிலம் மாலூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ தேர்தல் வெற்றி செல்லாது: மறு வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு

நஞ்சே கவுடா

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மாலூர் தொகு​தி​யின் காங்​கிரஸ் எம்​எல்ஏ நஞ்சே கவுடா கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வென்றது செல்​லாது, அந்த தேர்​தலில் பதி​வான வாக்​கு​களை மீண்​டும் எண்ண வேண்​டும் என கர்​நாடக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கோலார் மாவட்​டம், மாலூர் தொகு​தி​யில் காங்​கிரஸ் வேட்​பாளர் நஞ்சே கவு​டாவுக்​கும், பாஜக வேட்​பாளர் மஞ்​சு​நாத் கவு​டாவுக்​கும் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. இரு​வரும் இறு​திச்​சுற்று வாக்கு எண்​ணிக்கை வரை மாறி மாறி முன்​னிலை வகித்​தனர்.

இறு​தி​யில் மஞ்​சு​நாத் கவுடா 50,274 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில், நஞ்சே கவுடா கூடு​தலாக 781 வாக்​கு​கள் பெற்று (50,955 வாக்​கு​கள்) வெற்றி பெற்​றார். இதனால் மஞ்சுநாத் ஆதரவாளர்கள் மீண்டும் வாக்குகளை எண்ண வலியுறுத்தினர். இதை எதிர்த்து மஞ்​சு​நாத் கவுடா கர்​நாடக உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை நீதிபதி தேவ​தாஸ் தலை​மையி​லான அமர்வு கடந்த 2 ஆண்​டு​களாக விசா​ரித்​தது. இவ்​வழக்​கில் இரு தரப்பு வாத​மும் நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி தேவ​தாஸ் தனது தீர்ப்பை அறி​வித்​தார்.

அதில், ‘‘வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்ட நஞ்​சேக​வுடா தரப்​பினர் வாக்கு எண்​ணிக்​கை​யில் முறை​கேடு செய்​திருப்​பதை எதிர் தரப்​பினர் ஆதா​ரங்​களு​டன் நிரூபித்​துள்​ளனர். எனவே நஞ்சே கவு​டா​வின் தேர்​தல் வெற்றி செல்​லாது. அந்த தேர்​தலில் பதி​வான வாக்​கு​களை மீண்​டும் எண்​ணி, முடிவை தேர்​தல் ஆணை​யம் அறிவிக்க வேண்​டும்'' என்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து நஞ்​சேக​வுடா தரப்​பில், ''இந்த தீர்ப்பை உடனடி​யாக அமல்​படுத்த உத்​தர​விடக்​கூ​டாது. எங்​களது தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்ய இருக்​கிறோம்’’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

30 நாட்கள் அவகாசம்: இதனை ஏற்ற நீதிப​தி, ''மேல்​முறை​யீடு செய்​வதற்கு ஏற்ற வகை​யில் இந்த தீர்ப்பு 30 நாட்​களுக்கு நிறுத்தி வைக்​கப்​படு​கிறது. 30 நாட்​களுக்​குள் உச்ச நீதி​மன்​றம் மேல்​முறை​யீட்டு மனுவை வி​சா​ரித்து தீர்ப்​பளிக்​கா​விட்​டால், தேர்​தல் ஆணை​யம் அந்த தொகு​தியை காலி​யான​தாக அறிவிக்​கலாம்​'' என உத்​தர​விட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x