Published : 17 Sep 2025 07:11 AM
Last Updated : 17 Sep 2025 07:11 AM

அரசு பணியில் சேர்ந்து 6 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த பெண் கைது

இந்துக்களின் நிலங்களை சட்டவிரோதமாக பிற வகுப்பினருக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்ட அசாம் சிவில் சர்வீஸ் அதிகாரி நூபூர் போரா. (அடுத்த படம்) அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி ரொக்கம்.

குவாஹாட்டி: இந்​துக்​களின் இடங்​களை வேறு பிரி​வினருக்கு சட்​ட​விரோத​மாக மாற்றிக் கொடுத்து ஊழலில் ஈடு​பட்ட அசாம் அதி​காரி கைது செய்​யப்​பட்​டார். அசாம் சிவில் சர்​வீஸ் அதி​காரி நூபூர் போரா. இவர் கம்​ரூப் மாவட்​டத்​தின் கோராய்​மாரி பகுதியில் வட்​டார அதி​காரி​யாக 6 ஆண்​டு​கள் பணி​யாற்​றி​னார். இவர் வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​துள்​ளார் என முதல்​வர் அலு​வல​கத்​துக்கு ஊழல் புகார்​கள் வந்​தன.

மேலும் இவர் பர்​பேட்டா மாவட்​டத்​தில் பணி​யாற்​றிய​போது, இந்​துக்​களின் இடங்​களை வேறு பிரி​வினருக்கு சட்​ட​விரோத​மாக மாற்​றிக் கொடுத்​தார் எனவும் குற்​றச்​சாட்டு கூறப்​பட்​டது. இதையடுத்து நூபூர் போரா வீட்​டில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்​போது அவரது வீட்​டில் ரூ.1 கோடி ரொக்​கம், பல லட்​சம் மதிப்​பிலான வைர நகைகள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக எஸ்​.பி. ரோசி கலிதா தெரி​வித்​தார்.

இவருக்கு குவாஹாட்டி கோட்டா நகரில் 2 அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் உள்​ளன. நூபூர் போரா​வுடன் இணைந்து குற்​றம்​சாட்டப்பட்ட சுரஜித் தேகா என்​பவருக்கு சொந்​த​மான இடங்​களி​லும் சோதனை நடை​பெற்​றது. அசாமில் சிறு​பான்​மை​யினர் அதிகம் உள்ள பகு​தி​களில் இவர் பணி​யாற்​றிய​போது ஊழலில் ஈடு​பட்​டுள்​ளார் என முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

அசாமில் இந்​துக்​களின் நிலங்​கள் எல்​லாம் வேறு பிரி​வினருக்கு சட்​ட​விரோத​மாக மாற்​றப்​படு​வ​தாக புகார் எழுந்​தது. அசாம் மாநிலத்​தில் வசித்த பூர்வீக மக்​கள் எல்​லாம் வேறு இடங்​களுக்கு மாறு​வதும், அங்கு சட்​ட ​விரோத​மாக ஊடுரு​விய சிறுபான்மையினர் தங்​கு​வதும் அதி​கரித்​தது.

இது நாட்​டின் பாது​காப்புக்கு ஆபத்து என்​ப​தால், இந்​துக்​களின் நிலங்​கள் வேறு பிரி​வினருக்கு மாற்​று​வதற்கு காவல்​துறை ஒப்புதல் பெற, நிலை​யான செயல்​பாட்டு நடை​முறைக்கு (எஸ்​ஓபி) அசாம் சட்​டப்​பேரவை சமீபத்​தில் ஒப்​புதல் அளித்​தது. இதையடுத்து அசாம் அதி​காரி நூபூர் போரா வீட்​டில் சோதனை நடத்​தப்​பட்டு ஊழல் பணம் மற்​றும் சொத்​துக்​கள் பறி​முதல் செய்யப்​பட்​டு வரு​கின்​றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x