Published : 17 Sep 2025 06:50 AM
Last Updated : 17 Sep 2025 06:50 AM

20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும்

புதுடெல்லி: இரு​பது ஆண்​டுக்கு மேல் பணி​யாற்​றி, விருப்ப ஓய்வு பெறும் மத்​திய அரசு ஊழியர்​களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்​ளது. மத்​திய பணி​யாளர் ஓய்​வூ​தி​யம் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் நலத் துறை மத்​திய சிவில் சேவை விதி​கள், 2025–ஐ கடந்த 2-ம் தேதி அரசிதழில் அறி​வித்​தது.

இவ்​வி​தி​கள், தேசிய ஓய்​வூ​திய திட்​டத்​தின் (NPS) கீழ் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (UPS) விருப்​ப​மாகத் தேர்ந்​தெடுக்​கும் மத்​திய அரசு ஊழியர்​களின் ஓய்​வூ​திய நன்​மை​கள் மற்​றும் பணி​சார் விஷ​யங்​களை ஒழுங்​குபடுத்​துகின்​றன.

இந்த விதி​கள் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டத்தை தேர்ந்​தெடுத்​துள்ள ஊழியர்​களுக்​கு, 20 ஆண்​டு​கள் பணி​யாற்றி பிறகு விருப்ப ஓய்வு (விஆர்​எஸ்) பெறும் வாய்ப்பை வழங்​கு​கிறது.

மத்​திய பணி​யாளர் நலத்​துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டத்​தின் முழு​ பயன் 25 ஆண்​டு​கள் பணியை நிறைவு செய்த பின்​னரே வழங்​கப்​படும். ஆனால், 20 ஆண்​டு​கள் அல்​லது அதற்கு மேல் பணியை நிறைவு செய்த பின் விருப்ப ஓய்வு பெற்​றால் முழு ஓய்வூதிய பயன் வழங்​கப்​படும்’’ என கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x