Published : 17 Sep 2025 06:53 AM
Last Updated : 17 Sep 2025 06:53 AM

ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனங்களுக்கு அரசு அறிவுரை

புதுடெல்லி: ஜிஎஸ்டி சலுகைகளை பாலிசி​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டும் என்று காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மத்​திய அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது. பொதுத்​துறை காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலை​வர்​கள், தனி​யார் துறை ஆயுள் மற்​றும் ஆயுள் அல்​லாத காப்​பீட்டு நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள், நிதி சேவை​கள் துறை, காப்​பீடு ஒழுங்​கு​முறை மேம்​பாட்டு ஆணைய உயர​தி​காரி​கள், ஆயுள் காப்​பீடு கவுன்​சில் மற்​றும் பொது காப்​பீடு கவுன்​சிலின் அதி​காரி​கள் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது.

ஜிஎஸ்டி கவுன்​சிலின் 56-வது கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்​த​படி அனைத்து தனி​நர் ஆயுள் மற்​றும் மருத்​து​வக் காப்​பீட்டு பாலிசிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் இக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​துக்கு நிதி சேவை​கள் துறை செய​லா​ளர் என்​.​நாக​ராஜு தலைமை வகித்​துப் பேசுகை​யில், “மத்​திய அரசின் ஜிஎஸ்டி சீர்​திருத்​த​மானது காப்​பீட்டை மிக​வும் அணுகக்​கூடிய​தாக​வும் செலவு குறைந்​த​தாக​வும் மாற்​றி​யுள்​ளது.

இதன் மூலம் நாடு முழு​வதும் காப்​பீடு பரவலாக சென்​றடைவதுடன் காப்​பீட்டு நிறு​வங்​களின் நிதி பாது​காப்​பும் வலுப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வரி சீரமைப்​பின் பலன்​கள் ஏற்​கெனவே உள்ள பாலிசி​தா​ரர்​கள், வருங்​கால பாலிசி​தா​ரர்​கள் ஆகிய இரு தரப்​பினருக்​கும் முழு​மை​யாக சென்​றடைவதை உறு​திப்​படுத்த வேண்​டும்’’ என்​றார்.

மருத்​துவ மற்​றும் ஆயுள் காப்​பீட்​டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்​கப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது ஜிஎஸ்டி முற்​றி​லும் ரத்து செய்யப்​பட்​டுள்​ளது. மதிப்​பீட்டு நிறு​வன​மான ஐசிஆர்ஏ வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “மருத்​து​வக் காப்​பீட்டு பிரீமி​யங்​களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ள​தால் அதிக நோயாளி​களை காப்​பீடு சென்​றடைந்து மருத்​து​வ​மனை​களுக்​கும் பயனளிக்​கும்​” என்​று கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x