Published : 17 Sep 2025 06:51 AM
Last Updated : 17 Sep 2025 06:51 AM

21 மொழியில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து: டெல்லி முதல்வர் வீடியோ வெளியிட்டார்

புதுடெல்லி: தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வீடியோவை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று வெளி​யிட்​டார். பிரதமர் நரேந்​திர மோடி இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்​டாடு​கிறார்.

இதையொட்டி டெல்லி பள்ளி மாணவ, மாண​வியர் தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்​துகளை கூறும் ஆடல், பாடல் வீடியோவை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று வெளி​யிட்​டார். அந்த வீடியோ​வில் டெல்லி தமிழ் கல்வி கழக பள்​ளி​யின் மாண​வியர் உட்பட பல்​வேறு மொழி, கலாச்​சார பின்​னணி கொண்ட மாணவ, மாண​வியர் ஆடி, பாடி பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்​துகளை கூறி​யுள்​ளனர்.

இதுகுறித்து முதல்​வர் ரேகா குப்தா கூறிய​தாவது: டெல்​லி​யின் வளர்ச்​சிக்​காக பிரதமர் நரேந்​திர மோடி அயராது பாடு​பட்டு வரு​கிறார். அவருக்கு நன்றி செலுத்​தும் வகை​யில் 21 மொழிகளில் டெல்லி மாணவ, மாண​வியர் வாழ்த்​துப் பாடலை பாடி உள்​ளனர். இந்த வாழ்த்து வீடியோவை டெல்லி கல்​வித் துறை தயார் செய்​தது. பாடல் வாயி​லாக பிரதமருக்கு வாழ்த்து கூறிய அனைத்து மாணவ, மாண​வியரை​யும் பா​ராட்​டு​கிறேன். இவ்​வாறு முதல்​வர்​ ரேகா குப்​தா தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x