Published : 16 Sep 2025 07:42 AM
Last Updated : 16 Sep 2025 07:42 AM

செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுரை

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க செயற்கை நுண்​ணறி​வின் பங்கு என்ற தலைப்​பில் நிதி ஆயோக் சார்​பில் டெல்​லி​யில் நேற்று சிறப்பு ஆய்​வறிக்கை வெளி​யிடப்​பட்​டது.

இதில் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மின்​னணு தகவல் தொழில்​நுட்பத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதி​காரி சுப்​பிரமணி​யம் ஆகியோர் பங்​கேற்​றனர்.

இந்த நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பம் அபரிமித​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. இந்த தொழில்​நுட்​பத்தை ஆக்​கப்​பூர்​வ​மாக பயன்​படுத்த வேண்​டும். குறிப்​பாக நகரங்​களை மேம்​படுத்​தும் திட்​டங்​களுக்கு ஏஐ தொழில்​நுட்​பங்​களை முழு​மை​யாக பயன்​படுத்த வேண்​டும். அனைத்து மாவட்ட நிர்​வாகங்​களும் வளர்ச்சி திட்​டங்​களை செயல்​படுத்த ஏஐ தொழில்​நுட்​பத்தை பயன்​படுத்​தலாம்.

ஏஐ தொழில்​நுட்​பத்​தால் பல்​வேறு சவால்​களும் எழுந்​துள்​ளன. இதுகுறித்து மிகுந்த எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். இந்த தொழில்​நுட்​பத்தை தவறாக பயன்​படுத்​து​வதை தடுக்க விதி​களை வரையறுக்க வேண்​டும். இவ்​வாறு அமைச்​சர் நிர்​மலா சீதாராமன்​ பேசி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x