Published : 16 Sep 2025 07:26 AM
Last Updated : 16 Sep 2025 07:26 AM

உத்தர பிரதேசத்தில் ஒருவர் பெயரில் 6 மாவட்டத்தில் அரசு பணியில் சேர்ந்து மோசடி: தலைமறைவானவர்களுக்கு போலீஸ் வலை

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்​தில் கடந்த 2016-ம் ஆண்டு 403 எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​கள் தேர்வு செய்​யப்​பட்​ட னர். அப்​போது உ.பி.​யில் அகிலேஷ் யாதவ் தலை​மையி​லான சமாஜ்​வாதி அரசு பொறுப்​பில் இருந்​தது.

எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களில் ஆக்​ராவை சேர்ந்த அர்​பித் சிங் என்​பவரும் ஒரு​வர். நியமன பட்​டியலில் 80-வது இடத்​தில் அவர் இடம்​பெற்​றிருந்​தார். அதன்​பிறகு சில நாட்​களில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் மற்ற மாவட்​டங்​களில் உள்ள சுகா​தார மையங்​களில் எக்​ஸ்ரே டெக்​னீஷியன்​களாகப் பணி​யில் சேர்ந்​துள்​ளனர்.

அவர்​கள் அனை​வரும் ஆக்​ராவை சேர்ந்த உண்​மை​யான அர்​பித் சிங்​கின் நியமன கடிதம் மற்​றும் ஆதார் உட்பட அனைத்து ஆவணங்​களை​யும் போலி​யாக தயாரித்து அரசுப் பணி​யில் சேர்ந்​தது தற்​போது கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து பாரா மெடிக்​கல் துறை இயக்​குந​ராக உள்ள டாக்​டர் ரஞ்​சனா கரே, வசிர்​கஞ்ச் போலீஸ் நிலை​யத்​தில் நேற்று புகார் அளித்​தார். அதில் பல்​ராம்​பூர், பரூக்​கா​பாத், பண்​டா, ராம்​பூர், அம்​ரோஹா, ஷம்லி ஆகிய மாவட்​டங்​களில் ‘அர்​பித்’ என்ற பெயரில் 6 பேர் போலி​யாக வேலை செய்​துள்​ளனர். அதன் மூலம் கடந்த 9 ஆண்​டு​களாக அரசு சம்​பளம் பெற்​றுள்​ளனர்.

இது​வரை ரூ.4.5 கோடி அரசு பணம் அவர்​களுக்கு சம்​பள​மாக வழங்​கப்​பட்​டுள்​ளது. மோசடி செய்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று டாக்​டர் ரஞ்​சனா கரே தெரி​வித்​துள்​ளார்.

அதன் அடிப்​படை​யில் போலீ​ஸார் பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்து மோசடி கும்​பலை தீவிர​மாக தேடி வருகின்றனர். இதற்​கிடை​யில், ஆள் மாறாட்​டம் செய்து மோசடி​யில் ஈடு​பட்ட கும்​பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க உ.பி. துணை முதல்​வரும் சுகா​தா​ரத் துறை அமைச்​சரு​மான பிரஜேஷ் பதக்கை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

உ.பி.​யில் அரசுப் பணி​யில் இருப்​பவர்​கள் பற்​றிய விவரங்​கள் சரி பார்க்​கும் பணி நடை​பெறுகிறது. அதற்​காக, ‘மானவ் சம்​ப​டா’ என்ற பெயரில் ஆன்​லைன் போர்ட்​டல் தொடங்​கப்​பட்​டது. இந்த போர்ட்​டல் மூலம் அரசு ஊழியர்​களை சரி பார்க்​கும் போது, 6 மாவட்​டங்​களில் ஊழியரின் பெயர், தந்தை பெயர், பிறந்த நாள் எல்​லாம் ஒன்​றாக இருந்​தது அம்​பல​மாகி உள்​ளது. அவர்​கள் கடந்த 9 ஆண்​டு​களாக மாதம் ரூ.69,595 சம்​பளம் பெற்று வந்​துள்​ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x