Published : 16 Sep 2025 07:19 AM
Last Updated : 16 Sep 2025 07:19 AM

வக்பு சட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வக்பு சட்ட திருத்​தத்​துக்கு முழு​வது​மாக இடைக்​காலத் தடை விதிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது. வக்பு சட்ட திருத்​தத்தை எதிர்த்து தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்​டின் ஜார்ஜ் மசி அமர்வு விசா​ரித்து இடைக்​கால தீர்ப்பை வழங்கி தேதி குறிப்​பி​டா​மல் ஒத்தி வைத்​தது.

முகாந்​திரம் எழவில்​லை: இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நேற்று அளித்த இடைக்​கால தீர்ப்பில் கூறி​யிருப்​ப​தாவது: ஒட்டு மொத்த வக்பு சட்ட திருத்​தத்​துக்​கும் தடை விதிக்​கும் முகாந்​திரம் எழவில்​லை. இருப்​பினும் சில விதி​களுக்கு இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டிய அவசி​யம் உள்​ளது.

தற்​போது பிறப்​பிக்​கப்​படும் உத்​தர​வு​கள் இடைக்​காலத்​துக்​கானது என்​ப​தைத் தெளிவுப்​படுத்​துகிறோம். வக்பு வாரி​யத்​துக்கு சொத்​துகளைத் தானமாக அளிக்​கும் நபர் 5 ஆண்​டு​கள் முஸ்​லிமாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​கான விதி​களை மாநில அரசுகளும் உரு​வாக்​கும் வரை, இந்த விதிக்கு இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது.

ஆக்​கிரமிப்பு புகாருக்கு உள்​ளாகும் வக்பு சொத்து மீது தீர்ப்​பா​யம் முடிவு எடுக்​கும் வரை அதன் அங்​கீ​காரத்தை அரசு ரத்து செய்ய வகைச் செய்​யும் திருத்த பிரிவுக்கு இடைக்​காலத் தடை விதிக்​கப்​படு​கிறது. வக்பு சொத்து அங்​கீ​காரத்தை ரத்து செய்​யும் அதி​காரத்தை மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அளித்​தால் அது அதி​கார பிரி​வினை கோட்​பாட்​டுக்கு எதி​ராக அமைந்​து​விடும்.

மத்​திய வக்பு கவுன்​சிலில் முஸ்​லிம் அல்​லாத இதர உறுப்​பினர்​கள் 4 பேருக்கு மேலும், மாநில வக்பு வாரி​யத்​துக்கு நியமிக்​கப்​படும் 11 உறுப்​பினர்​களில் முஸ்​லிம் அல்​லாத உறுப்​பினர்​கள் 3 பேருக்​கும் மேலும் இருக்​கக் கூடாது. மாநில வக்பு வாரி​யத்​துக்கு நியமிக்​கப்​படும் தலைமை நிர்​வாக அதி​காரி​யான அலு​வல்​சார்​பான உறுப்​பினர் முஸ்​லிம் அல்​லாதவ​ராக இருப்​பார் என்ற விதிக்​குத் தடை இல்​லை.

முஸ்லிமை நியமிக்க முயற்சி: இருப்​பினும் இவ்​வாறு அலு​வல்​சார்​பான உறுப்​பின​ரான தலைமை செயல் அதி​காரி பதவிக்கு கூடு​மான வரை​யில் முஸ்​லிமை நியமிக்க முயற்சி செய்ய வேண்​டும். வக்பு சொத்​துகள் பல ஆண்​டு​களாகப் பதிவு செய்​யப்​படு​வ​தால், வக்பு சொத்​துகளைப் பதிவு செய்ய வகைச் செய்​யும் சட்ட திருத்​தத்​துக்​குத் தடை விதிக்​கத் தேவை​யில்​லை.

தொல்​லியல் சட்​டம்: தொல்​லியல் சட்​டம் அனு​ம​திப்​பதை கருத்​தில் கொண்டு வக்பு சொத்​துகளுக்கு தொல்​லியல் நினை​வுச்​சின்ன அந்​தஸ்து வழங்​கும் பிரிவுக்​குத் தடை இல்​லை. இது​போல, பழங்​குடி​யினருக்கு சொந்​த​மான இடங்​களை வக்பு சொத்​துகளாக அறிவிக்​கத் தடை செய்​யும் சட்ட பிரிவுக்கு தடை இல்​லை.

முஸ்​லிம் அல்​லாதோர் வக்​புக்கு சொத்​துகளைத் தான​மாக வழங்​கி​னால், முதலில் அறக்​கட்​டளைக்கு வழங்​கி, பின்​னர் வக்​புக்கு சொத்​துகளை அளிக்க முடி​யும். எனவே, முஸ்​லிம் அல்​லாதோர் சொத்​துகளைத் தான​மாக அளித்​ததை அங்​கீகரித்த வக்பு சட்ட பிரிவை ரத்து செய்​வதை தடை விதிக்க முடி​யாது.

அரசுக்கு சொந்​த​மான ஏராள​மான சொத்​துகள் அனுபவத்​தி​லுள்ள வக்பு சொத்​துகள் என்ற பெயரில் ஆக்​கிரமிப்​பதை தடுக்க அனுபவத்​தி​லுள்ள வக்பு சொத்து என்ற பிரிவை, திருத்த சட்​டத்​தில் மத்​திய அரசு ரத்து செய்​துள்​ள​தாக​வும், இது பின்​தே​தி​யிட்டு நடை​முறைக்கு வரும் என்​றும் மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் தெரி​வித்​துள்​ள​தால், அனுபவத்​தி​லுள்ள வக்பு சொத்தை ரத்து செய்​யும் சட்ட திருத்​தம் தன்​னிச்​சை​யானது எனக் கூற முடி​யாது. இவ்​வாறு இடைக்​கால தீர்ப்​பில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x