Published : 15 Sep 2025 06:49 AM
Last Updated : 15 Sep 2025 06:49 AM

காங்கிரஸுக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தாரங்: சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். ஒவ்​வொரு கடையிலும் சுதேசி பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அறி​வுறுத்தி உள்​ளார்.

மிசோரம், மணிப்​பூர், அசாம் மாநிலங்​களில் பல்​வேறு அரசு நலத்​திட்​டங்​களை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தொடங்​கி​வைத்​தார். அன்​றைய தினம் இரவு அசாமின் குவாஹாட்டி நகரில் அவர் தங்​கி​னார்.

இதைத் தொடர்ந்து அசாமின் தாரங் நகரில் நேற்று காலை நடந்த விழா​வில் ரூ.18,530 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு பிரதமர் நரேந்​திர மோடி அடிக்​கல் நாட்​டி​னார். சில திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: நான் தீவிர சிவ பக்​தன். என் மீது அவதூறுகள் அள்ளி வீசப்​படு​கின்​றன. இதை சகித்​துக் கொள்​கிறேன். என் மீது உமிழப்​படும் விஷத்தை விழுங்கி விடு​கிறேன். ஆனால் அசாமின் புகழ்​பெற்ற பாடகர் பூபேன் அசா​ரிகா மீது காங்​கிரஸார் அவதூறுகளை அள்ளி வீசுவதை என்​னால் ஏற்​றுக் கொள்ள முடி​யாது. இதற்கு அசாம் மக்​கள் தகுந்த பாடம் கற்​பிப்​பார்​கள்.

கடந்த 1962-ம் ஆண்டு இந்​தி​யா, சீனா இடையே போர் நடை​பெற்​றது. இதன்​பிறகு அப்​போதைய பிரதமர் நேரு கூறிய வார்த்​தைகள், வடகிழக்கு மாநில மக்​களை காயப்​படுத்​தி​யது. அந்த காயங்​கள் இன்​று​வரை ஆறவில்​லை.

காங்​கிரஸ் ஆட்​சிக் காலத்​தில் ஊடுரு​வல்​காரர்​கள், தேச​விரோ​தி​களுக்கு முழு ஆதரவு அளிக்​கப்​பட்​டது. பாகிஸ்​தானின் பொய்​களை, அந்த கட்சி தனது கொள்​கைகளாக பின்​பற்றி வரு​கிறது. ஆபரேஷன் சிந்​தூரின்​போது இந்​திய ராணுவத்​துக்கு காங்​கிரஸ் ஆதரவு அளிக்​க​வில்​லை. அதற்கு நேர்​மாறாக பாகிஸ்​தான் ஆதரவு பெற்ற தீவிர​வா​தி​களுக்கு அந்த கட்சி ஆதரவு அளித்​தது. காங்​கிரஸ் குறித்து இந்​தி​யர்​கள் மிகுந்த எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

அந்த கட்​சியை பொறுத்​தவரை வாக்கு வங்​கிக்கு மட்​டுமே முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது. நாட்டு நலனில் துளி​யும் அக்​கறை கிடை​யாது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த லட்சியத்தை எட்ட வடகிழக்கு முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

‘கன்னியாகுமரியில் சுற்றினேன்'- பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கன்னியாகுமரியில் வாழ்ந்தேன். அப்போது கழுத்தில் காமோச்சா (துண்டு) அணிவதை வழக்கமாக கொண்டிருந்தேன். கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தேன். அப்போது எனது சொந்த ஊர் அசாமா என்று கேள்வி எழுப்பினர். நான் குஜராத்தை சேர்ந்தவன் என்று விளக்கம் அளித்தேன்.

அசாமின் காமோச்சாவை மக்கள் அனைவரும் அடையாளம் கண்டு கொள்கின்றனர். இது சுதேசி பொருட்களுக்கு கிடைக்கும் மரியாதை. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உலகில் முதன்முதலாக மூங்கில் எத்தனால் ஆலை: அசாமின் கோலாகாட் மாவட்டம், நுமாலிகர் பகுதியில் ரூ.5,000 கோடியில் எத்தனால் ஆலை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ஆலையை பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அங்கு உலகில் முதல்முறையாக மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அசாம் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவில் இதுவரை கரும்பு கழிவுகளில் இருந்தே எத்தனால் தயாரிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் முதல்முறையாக அசாம் மாநிலத்தில் மூங்கிலில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அசாம் விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் மூங்கில் வாங்கப்படும். இதன்மூலம் 50,000 டன் எத்தனால் உற்பத்தி செய்யப்படும். அதோடு 18,000 டன் பர்புரல், 11,000 டன் அசிடிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படும். புதிய ஆலையால் மூங்கில் சாகுபடி செய்யும் சுமார் 50,000 விவசாயிகள் பயன் அடைவார்கள். மேலும் நுமாலிகர் பகுதியில் ரு.7,200 கோடியில் பாலிப்புரோப்பிலீன் ஆலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அசாம் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x