Published : 14 Sep 2025 09:20 AM
Last Updated : 14 Sep 2025 09:20 AM

இந்​தியா - பாக். போட்டி விவகாரம்: ஆதித்ய தாக்கரேவை கிண்டல் செய்த அமைச்சர்

மகா​ராஷ்டிர அமைச்​சர் நிதேஷ் ராணே, ஆதித்ய தாக்​கரே

புதுடெல்லி: ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் விளை​யாட்​டுப் போட்​டியை ஐக்​கிய அரபு அமீரகம் நடத்தி வரு​கிறது. இதில் இந்​தியா - பாகிஸ்​தான் போட்டி இன்று நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யின் ஆதித்ய தாக்​கரே வெளி​யிட்​டுள்ள பதி​வில், “தீ​விர​வாதத்தை வளர்க்​கும் ஒரு நாட்​டுட​னான கிரிக்​கெட் போட்டி தொடர்​பாக மத்​திய அரசு ஏன் அமை​தி​யாக இருக்​கிறது?” என்று கேள்வி எழுப்​பி​யிருந்​தார்.

இதற்கு மகா​ராஷ்டிர அமைச்​சர் நிதேஷ் ராணே நேற்று கூறும்​போது, ‘‘இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போட்​டியை ஆதித்ய தாக்​கரே விமர்​சனம் செய்​தா​லும் அவர் ரகசி​ய​மாக, பர்தா அணிந்து பார்ப்​பார்’’ என்று கிண்​டல்​ செய்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x