Last Updated : 14 Sep, 2025 07:30 AM

 

Published : 14 Sep 2025 07:30 AM
Last Updated : 14 Sep 2025 07:30 AM

கர்நாடகாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேன் புகுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: க‌ர்​நாட​கா​வில் உள்ள ஹாசன் அருகே விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் லாரி புகுந்​த​தில் 9 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில் படு​கா​யம் அடைந்த 27 பேர் ஹாசன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள‌னர்.

கர்​நாடக மாநிலம் ஹாசன் மாவட்​டத்​தில் உள்ள மொசலே ஹொசஹள்ளி கிராமத்​தினர் நேற்று முன் தினம் இரவு 9 மணி​யள​வில் ஹாசன் தேசிய நெடுஞ்​சாலை​யில் விநாயகர் சிலையை ஏற்​றிக் கொண்டு ஊர்​வல​மாக சென்​றனர். இதனால் தேசிய நெடுஞ்​சாலை​யின் ஒரு பக்​கம் சாலைகள் அடைக்​கப்​பட்​டு, இன்​னொரு பக்​கத்​தில் போக்​கு​வரத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தது.

மொசலே ஹொசஹள்​ளியை கடந்து விநாயகர் சதுர்த்தி ஊர்​வலம் சென்​ற​போது, எதிர் திசை​யில் ஹொலேநர்​சிப்​பூர் நோக்கி சென்ற வேன் சென்ட்​டர் மீடியன் மீது ஏறி ஊர்​வலத்​தில் பங்​கேற்ற மக்​கள் மீது மோதி​யது. இந்த விபத்​தில் 7 பேர் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர். மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லும் வழி​யில் 2 பேர் மரணம் அடைந்​தனர்.

இந்த கோர விபத்​தில் படு​காயமடைந்த 27 பேர் ஹாசன் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள‌னர். இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என மருத்​து​வ​மனை வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. உயி​ரிழந்த 9 பேரும் 35 வயதுகுட்​பட்ட இளைஞர்​கள் என்​ப​தால் ஹாசன் மொசலே ஹொசஹள்ளி கிராமத்​தினர் சோகமடைந்​தனர்.

இதுகுறித்து ஹொலேநர்​சிப்​பூர் போலீ​ஸார் 5 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த விபத்​துக்கு காரண​மான வேன் ஓட்​டுநர் புவனேஷ் குமாரை காயங்​களு​டன் கைது செய்து விசா​ரித்​தனர். முதல்​கட்ட விசா​ரணை​யில், வேன் வேக​மாக இயக்​கிய நிலை​யில் எதிரில் வந்த இரு சக்கர வாக​னத்​தின் மீது மோது​வதை தவிர்க்க ஓட்​டுநர் முயற்​சித்​துள்​ளார். அப்​போது வேன் அவரது கட்​டுப்​பாட்டை இழந்து விநாயகர் சிலை ஊர்​வலத்​தில் புகுந்​த​தால் இந்த விபத்து ஏற்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது.

இந்த விபத்​துக்கு பிரதமர் மோடி, கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, மத்​திய அமைச்​சர் எச்​.டி. குமார​சாமி உள்​ளிட்​டோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். முதல்​வர் சித்​த​ராமை​யா, இந்த விபத்​தில் இறந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.5 லட்​சம், காயமடைந்​தவர்​களுக்கு இலவச மருத்​துவ சிகிச்​சை அளிக்​கப்​படும்​ எனவும்​ அறி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x