Published : 14 Sep 2025 07:26 AM
Last Updated : 14 Sep 2025 07:26 AM

தெலங்கானாவில் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட பெண் மாவோயிஸ்ட் தலைவர் சுஜாதக்கா சரண்

ஹைதராபாத்: தலைக்கு ரூ.1 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்த பெண் மாவோ​யிஸ்ட் தலை​வர் தெலங்​கானா மாநில போலீ​ஸாரிடம் நேற்று சரண் அடைந்​தார்.

தெலங்​கானா மாநிலம் கத்​வால் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் போதுலா கல்​பனா என்​கிற சுஜாதக்கா (62). இவர் மாவோ​யிஸ்ட் கட்​சி​யின் மத்​தி​யக் குழு​வில் உள்ள பெண் மாவோ​யிஸ்ட் தலை​வர் ஆவார். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2011-ம் ஆண்டு அம்​மாநில போலீ​ஸாருக்​கும், மாவோ​யிஸ்ட்​களுக்​கும் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மாவோ​யிஸ்ட் கட்​சி​யின் முக்​கி​யத் தலை​வ​ரான கிஷண் ஜி என்​பவர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். சுஜாதக்​கா​வின் கணவர்​தான் இந்த கிஷண்ஜி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சுஜாதக்​கா, சத்​தீஸ்​கர் மாநில தெற்கு துணைப் பிரி​வின் தலை​வ​ராக இருந்​தார். இவர் மீது 106 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவரை உயிருடனோ அல்​லது பிண​மாகவோ பிடித்​துக் கொடுப்​பவருக்கு ரூ.1 கோடி வெகுமதி அளிக்​கப்​படும் என மேற்கு வங்​கப் போலீ​ஸார் அறி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில் சுஜாதக்​கா, நேற்று தெலங்​கானா போலீஸ் டிஜிபி ஜிதேந்​தர் முன்​னிலை​யில் சரண் அடைந்​தார். அவருக்கு பொது மன்​னிப்பு வழங்​கப்​பட்டு ரூ.25 லட்​சம் அளிக்​கப்​பட்​டது.

இதுகுறித்து டிஜிபி ஜிதேந்​தர் கூறுகை​யில், “1996-ல் சுஜாதக்​கா, மாவோ​யிஸ்ட் பிரிவு கமாண்​ட​ராக செயல்​பட்டு வந்​துள்​ளார். 2001-ல் தெலங்​கானா மண்டல மாவோ​யிஸ்ட் கம்​யூனிஸ்ட் கமிட்டி செயற்​குழு உறுப்​பின​ராக​வும் பணி​யாற்​றி​னார். இப்​போது அவர் ஆயுதங்​களை கீழே போட்​டு​விட்டு போலீ​ஸில் சரண் அடைந்​துள்​ளார். தனக்கு மறு​வாழ்வு அளிக்​கு​மாறு கேட்​டுக் கொண்​டதைத் தொடர்ந்து அவருக்கு மன்​னிப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அவரைப் போலவே இருக்​கும் மாவோ​யிஸ்ட்​களும் தங்​களது ஆயுதங்​களை கீழே போட்​டு​விட்டு சரண் அடைய முன்​வர​வேண்​டும்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x