Published : 14 Sep 2025 07:08 AM
Last Updated : 14 Sep 2025 07:08 AM

114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம் குறித்து இந்தியா பரிசீலனை

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.

அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்​ரானிக் சாதனம், பாகிஸ்​தான் போர் விமானங்​கள் ஏவிய பிஎல்​-15 என்ற சீனா தயாரிப்பு ஏவு​கணை​களை திசை திருப்​பியது. இதனால் ரஃபேல் போர் விமானங்​களை மீண்​டும் வாங்க விமானப்​படை விருப்​பம் தெரி​வித்​துள்​ளது. மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​களை பிரான்ஸ் நாட்​டின் டஸ்ஸோ ஏவி​யேஷன் நிறு​வனத்​துடன் இணைந்து இந்​தி​யா​விலேயே ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பில் தயாரிக்​கலாம் எனவும் விமானப்​படை கூறி​யுள்​ளது. இதுகுறித்து, பாது​காப்​புத்​துறை செய​லா​ளர் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் வாரி​யம் ஆலோ​சிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இந்​திய விமானப்​படை​யில் ஏற்​கெனவே 36 ரஃபேல் போர் விமானங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் இந்​திய கடற்​படை​யின் விமானம் தாங்கி போர்க்​கப்​பல்​களில் பயன்​படுத்த 36 ரஃபேல்​-எம் ரக விமானங்​கள் வாங்​க​வும் பிரான்​ஸிடம் ஆர்​டர் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் விமானப்​படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்​கள் வாங்​கப்​பட்​டால், இந்​தி​யா​விடம் உள்ள ரஃபேல் போர் விமானங்​களின் எண்​ணிக்கை 176-ஆக அதி​கரிக்​கும்.

ரஃபேல் போர் விமானத்​தின் எம்​-88 இன்​ஜின்​களை பழுது பார்க்​க​வும், பராமரிக்​க​வும், ஹைத​ரா​பாத்​தில் மையம் அமைக்க டஸ்ஸோ ஏவி​யேஷன் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது. ரஃபேல் போர் விமானங்​களை இந்​தி​யா​வில் தயாரிக்​கும் திட்​டத்​துக்கு ஒப்​புதல் கிடைத்​தால், டாடா நிறு​வன​மும், டஸ்ஸோ நிறு​வன​மும் இணைந்து ரஃபேல் விமான தயாரிப்​பில் ஈடு​படும். அப்​போது அதில் 60 சதவீதத்​துக்​கும் மேற்​பட்ட பாகங்​கள் இந்​தி​யா​வில் தயாரிக்​கப்​பட்​ட​தாக இருக்​கும்​​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x