Published : 13 Sep 2025 08:21 AM
Last Updated : 13 Sep 2025 08:21 AM

கைதான 5 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வலதுசாரி தலைவர்களை கொல்ல சதி: போலீஸ் விசாரணையில் அம்பலம்

புதுடெல்லி: ​வலது​சாரி தலை​வர்​கள் சிலரை ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் கொல்ல திட்​ட​மிட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்துள்ளது. பாகிஸ்​தானுடன் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் சிலர் இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டு​வ​தாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து டெல்​லி, ம.பி., ஜார்க்​கண்ட் மற்​றும் தெலங்​கா​னா​வில் ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 5 பேரை டெல்லி போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

இவர்​களில் மும்​பையை சேர்ந்த அஃப்​தாப், அபு சூபி​யான் ஆகிய இரு​வரை டெல்லி நிஜா​முதீன் ரயில் நிலை​யத்​தில் கடந்த 9-ம் தேதி ஆயுதங்​களு​டன் கைது செய்​தனர். பிறகு ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் அஷார் டேனிஸ், ம.பி.​யின் ராஜ்கர் நகரில் கம்​ரான் குரேஷி, தெலங்​கா​னா​வில் ஹசைஃப் ஏமன் ஆகியோரை கைது செய்​தனர். இவர்​களிடம் டெல்லி போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுதொடர்​பாக டெல்லி போலீஸார் கூறிய​தாவது: கைது செய்​யப்​பட்ட தீவிர​வா​தி​களின் தகவல் பரி​மாற்​றத்தை ஆய்வு செய்​த​தில் வலது​சாரி தலை​வர்​கள் சிலரை கொலை செய்ய அவர்​கள் திட்​ட​மிட்​டது தெரிய​வந்​துள்​ளது. இந்த தீவிர​வாத குழு​வில் சுமார் 40 உறுப்​பினர்​கள் உள்​ளனர். எனினும் அவர்களில் 5 பேருக்கு மட்​டுமே இந்த நடவடிக்கை பற்றி தெரி​யும்.

தீவிர​வாத குழு​வில் உள்ள சிலர் தற்​கொலை ஜாக்​கெட்​டு​கள், வெடிகுண்டு தயாரித்து வந்​துள்​ளனர். ராஞ்​சி​யில் கைதான அஷார்டேனிஸ் முக்​கிய தீவிர​வாதி ஆவார். ஆங்​கிலத்​தில் பட்​டமேற்​படிப்பு முடித்​துள்ள இவர் 'கஸ்​வா' என்ற ரகசிய பெயருடன் செயல்​பட்டு வந்​துள்​ளார். மாணவர் என்ற போர்​வை​யில் இந்த ஆண்டு ஜனவரி​யில் இவர் ராஞ்சி வந்​துள்​ளார். இவர் ஏற்​கெனவே வெடிகுண்டு தயாரிக்​கும்​போது காயம் அடைந்​துள்​ளார்.

ரசாயன ஆயுதங்​களை தயாரிப்​ப​தில் இவர் நிபுணத்​து​வம் பெற்​றவர். வெடிகுண்டு தயாரிப்​பது, ஆயுதங்​கள் கொள்​முதல் செய்வது, அமைப்​பின் பலத்தை அதி​கரிப்​பது போன்ற பணி​களை இவர்​கள் மேற்​கொண்டு வந்​துள்​ளனர். பாகிஸ்​தானில் இருந்து வரும் உத்​தர​வுப்​படி இவர்​கள் செயல்​பட்டு வந்​துள்​ளனர். சமூக ஊடக தளங்​கள் மூலம் இவர்​கள் தொடர்​பில் இருந்​துள்​ளனர். இவ்​வாறு டெல்​லி போலீஸ்​ வட்​டாரங்​கள்​ தெரி​வித்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x