Published : 11 Sep 2025 08:21 AM
Last Updated : 11 Sep 2025 08:21 AM

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அணி மாறி வாக்களித்தது நம்பிக்கை மோசடி: விசாரணை நடத்த மணீஷ் திவாரி கோரிக்கை

புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலை​வர் தேர்​தலில் எம்​.பி.க்​கள் சிலர் அணி மாறி வாக்​களித்​ததாக சர்ச்சை எழுந்துள்ளது. தேசியவாத காங்​கிரஸ் கட்​சி​யின் சுப்​ரியா சுலே கூறுகை​யில், “குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் ரகசிய வாக்​கெடுப்பு என்​றால், அதில் யார் யாருக்கு வாக்​களிக்​கிறார்​கள் என்​பதை எப்​படி அறிய முடி​யும்? எந்த கட்​சி​யின் ஓட்​டுக்​கள் பிரிந்​தது என எனக்கு தெரி​யாது? இதற்கு மகா​ராஷ்டிரா என்ன செய்ய முடி​யும்?” என்றார்.

சிவ சேனா உத்​தவ் அணி எம்​.பி அர்​விந்த் சாவந்த் கூறுகை​யில், ‘‘செல்​லாத ஓட்டு போட்ட எம்​.பி.க்​கள் எல்​லாம் படித்​தவர்​களா? அல்​லது முட்​டாள்​களா? அவர்​கள் மனசாட்​சிப்​படி​தான் வாக்​களித்​தார்​களா? அல்​லது விலைக்கு வாங்​கப்​பட்​டார்​களா? அவர்​கள் வேண்​டும் என்றே தவறாக வாக்​களித்​துள்​ளனர். எல்லா முகமை​களும் பா.ஜ.க​வின் அடிமை​கள்’’ என்​றார்.

காங்​கிரஸ் கட்​சி​யின் மணீஷ் திவாரி கூறுகை​யில், ‘‘குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில், எம்​.பி.க்​கள் சிலர் அணி மாறி வாக்​களித்து இருந்​தால், அது குறித்து இண்​டியா கூட்​டணி கட்​சிகள் விசா​ரணை நடத்த வேண்​டும். இது போல் அணி மாறி வாக்​களிப்​பது மிகப் பெரிய நம்​பிக்கை மோசடி. இது அணிக்​குள் ஒற்​றுமை குறித்​து கேள்​வி எழுப்​பு​கிறது’’ என்​றார்​. ராஷ்ட்​ரிய ஜனதா தளம் கட்​சி​யின் தேஜஸ்வி யாதவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x