Published : 11 Sep 2025 01:38 AM
Last Updated : 11 Sep 2025 01:38 AM

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்கிறார்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார்.

குடியரசு துணைத் தலை​வ​ராக இருந்த ஜெகதீப் தன்​கர் பதவி வில​கியதை தொடர்ந்​து, அப்​ப​தவிக்கு நேற்று முன்​தினம் தேர்​தல் நடை​பெற்​றது. இதில் பாஜக தலை​மையி​லான ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் போட்​டி​யிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.​ரா​தாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார்.

தேர்​தலில் மொத்​தம் பதி​வான 767 வாக்​கு​களில், சி.பி.​ரா​தாகிருஷ்ணன் 452 வாக்​கு​கள் பெற்​றார். எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் இவரை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சுதர்​சன் ரெட்டி 300 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று தோல்​வி​யுற்​றார்.

இந்​நிலை​யில், நாட்​டின் 15-வது குடியரசு துணைத் தலை​வ​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நாளை (செப். 12) பதவி​யேற்க உள்​ளார். அவருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பதவிப் பிர​மாணம் செய்​து​வைக்க உள்​ளார். டெல்​லி​யில் நடை​பெறும் விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

சி.பி.​ரா​தாகிருஷ்ணன் தற்​போது மகா​ராஷ்டிர ஆளுந​ராக உள்​ளார். குடியரசு துணைத் தலை​வ​ராக பதவி​யேற்​கும் முன் அவர் இப்​ப​த​வியை ராஜி​னாமா செய்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. குடியரசு துணைத் தலை​வரே மாநிலங்​களவை​யின் அலு​வல் வழி தலை​வர் ஆவார். எனவே, எதிர்வரும் குளிர்​கால கூட்​டத்​தொடரில் மாநிலங்​களவை தலை​வ​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன்​ கடமை​யாற்​று​வார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x