Published : 09 Sep 2025 07:27 AM
Last Updated : 09 Sep 2025 07:27 AM

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தது டிராய்

புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது காங்​கிரஸ் சார்​பில் தொண்​டர்​களுக்கு எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தாக காங்​கிரஸ் குற்​றம் சாட்டி உள்​ளது.

இதுதொடர்​பாக காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கூறும்​போது, “மகா​ராஷ்டிர தேர்​தலின்​போது மத்​திய உள்​துறை, தேர்​தல் ஆணையம், தொலைத்​தொடர்பு ஒழுங்​கு​முறை ஆணை​யம் (டி​ராய்) ஆகியவை பாஜக​வுக்கு ஆதர​வாக செயல்​பட்​டன. காங்​கிரஸ் சார்​பில் தொண்​டர்​களுக்கு எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி கோரப்​பட்​டது. ஆனால் டிராய் அனு​மதி அளிக்க மறுத்​து​விட்​டது" என்று குற்​றம் சாட்​டினர். இந்த சூழலில் காங்​கிரஸின் குற்​றச்​சாட்டை டிராய் திட்​ட​வட்​ட​மாக மறுத்து உள்​ளது.

இதுகுறித்து டிராய் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எஸ்​எம்​எஸ் அனுப்ப அனு​மதி கோரி ஓர் அரசி​யல் கட்சி (காங்​கிரஸ்) விண்​ணப்​பம் அளித்​ததாக​வும், அந்த விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​பட்​ட​தாக​வும் ஊடகங்​களில் செய்​தி​கள் வெளி​யாகி உள்​ளன. இதை திட்​ட​வட்​ட​மாக மறுக்​கிறோம். தனி​நபர்​களின் விண்​ணப்​பங்​களை ஏற்​ப​தோ, நிராகரிப்​பதோ டிரா​யின் பணி கிடை​யாது.

சம்​பந்​தப்​பட்ட தொலைத்​தொடர்பு சேவை நிறு​வனங்​களே (டிஎஸ்​பி) எஸ்​எம்​எஸ் தொடர்​பான விண்​ணப்​பங்​களை பரிசீலிக்​கின்​றன. ஊடகங்​களில் வெளி​யான செய்​தி​கள் முற்​றி​லும் தவறானவை. எஸ்​எம்​எஸ் அனுப்​புவது தொடர்​பான விண்​ணப்​பங்​களை நாங்​கள் பரிசீலிப்​பது கிடை​யாது.
இவ்​வாறு டிராய் அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x