Published : 09 Sep 2025 08:21 AM
Last Updated : 09 Sep 2025 08:21 AM

அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்க அவசியமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் கருத்து

புதுடெல்லி: அமெரிக்​கா​விடம் இந்​தியா மன்​னிப்பு கோர வேண்​டிய அவசி​யமில்லை என காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​து உள்​ளார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் உக்​ரைன் போருக்கு இந்​தியா மறை​முக​மாக உதவுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்​றம்​சாட்​டி​னார். ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொள்ள வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா நிராகரித்த​து.

இதையடுத்​து, இந்​திய பொருட்​களுக்கு அமெ ரிக்கா 50% வரி விதித்​தது. இதனால் ஜவுளி, மீன் உள்​ளிட்ட பொருட்​கள் ஏற்​றுமதி பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சீனா​வில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்​துப் பேசி​னார்.

இதையடுத்​து, பிரதமர் மோடி எப்​போதும் எனது நண்​பர்​தான் என்​றும் ஆனால் அவரின் சில நடவடிக்​கைகளை நான் விரும்​ப​வில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார். இது​போல இந்​தி​யா, அமெரிக்கா இடையே நல்ல நட்​புறவு உள்​ளது. அதுபற்றி கவலைப்​படத் தேவை​யில்லை என்​றும் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

இந்த சூழலில், அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவார்டு லுட்​னிக் கூறும்​போது, “ஓரிரு மாதங்​களfல் இந்​தியா விரை​வில் பேச்​சு​வார்த்​தைக்கு வரும். அப்​போது அவர்​கள் மன்​னிப்பு கோரி​விட்​டு, அதிபர் ட்ரம்​புடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொள்​வார்​கள்" என்​றார்.

இதற்கு பதிலடி தரும் வகை​யில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் கூறும்​போது, “இந்​தி​யா​வை​விட சீனா​வும் துருக்​கி​யும் அதிக அளவில் ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வா​யுவை வாங்​கு​கிறது. இது​போல ஐரோப்​பிய யூனியன் நாடுகளும் ரஷ்​யா​விட​மிருந்து சில பொருட்​களை இறக்​குமதி செய்​கின்​றன. ஆனாலும், அந்த நாடு​களை​விட இந்​தி​யா​வுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்​திருக்​கிறது. இது அமெரிக்​கா​வின் தவறான கொள்​கை.

அமெரிக்​காவைப் போலவே இந்​தி​யா​வும் இறை​யாண்மை கொண்ட நாடு என்​பதை லுட்​னிக் புரிந்து கொள்ள வேண்​டும். அவர்​கள் சொந்த இறை​யாண்மை முடிவு​களை எடுக்​கலாம். நாமும் நமது இறை​யாண்மை முடிவு​களை எடுக்​கலாம். இந்த விவ​காரத்​தில் இந்​தியா மிகுந்த முதிர்ச்​சி​யுடன் நடந்து கொண்​டுள்​ளது.

எனவே, அமெரிக்​கா​விடம் மன்​னிப்பு கோரு​வதற்கு எது​வும் இல்​லை. இன்​னும் சொல்​லப் போனால், அமெரிக்​கா​வின் முந்​தைய நிர்​வாகம்​தான் (ஜோ பைடன்) ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்க இந்​தி​யாவை ஊக்​கு​வித்​தது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலையை நிலை​யாக வைத்​திருக்க இந்த நடவடிக்​கை உதவும்​ என முந்​தைய அரசு கருதியது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x