Published : 09 Sep 2025 08:18 AM
Last Updated : 09 Sep 2025 08:18 AM
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள குட்டார் வனப் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர்.
இதில் பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதேவேளையில் பாதுகாப்பு படை தரப்பில் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இவர்களில் இருவர் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இறந்த தீவிரவாதிகளில் ஒருவர் உள்ளூரை சேர்ந்தவர், மற்றொருவர் வெளிநாட்டவர்
என்று தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT