Published : 09 Sep 2025 08:13 AM
Last Updated : 09 Sep 2025 08:13 AM
விஜயவாடா: ஆந்திர அரசு 11 ஐஏஎஸ் உயர் அதிகாரிகளை நேற்று இடமாற்றம் செய்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக மீண்டும் அனில் குமார் சிங்கால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ், தலைமைச் செயலக அட்மின் முக்கிய செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சாலை, கட்டிடத்துறை சிறப்பு பிரதான செயலாளராக கிருஷ்ணபாபு, வருவாய், கலால் துறை முதன்மைச் செயலாளராக முகேஷ் குமார் மீனா, சிறுபான்மை நலவாரிய முக்கிய செயலாளராக சி.எச். தர், வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறை செயலாளராகா காந்திலால் தண்டே நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆளுநரின் சிறப்பு செயலாளராக அனந்தராம், குடும்ப நலத்துறை சிறப்பு செயலாளராக சவுபர் கவுர், ஆந்திர பிரதேஷ் பவன் ரெசிடெண்ட் கமிஷனராக பிரவீன் குமார், தொழிலாளர் நல வாரிய ஆணையராக சேஷகிரி பாபு, வருவாய் (இந்து சமய அறநிலைய துறை) செயலாளராக ஹரி ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT