Published : 09 Sep 2025 07:30 AM
Last Updated : 09 Sep 2025 07:30 AM

லாலு பிர​சாத்தை சந்தித்த சுதர்சன் ரெட்டி: பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: குடியரசு துணைத் தலை​வர் தேர்​தல் இன்று (செப். 9) நடை​பெற உள்​ளது. இதில் எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்​டணி சார்​பில் உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி சுதர்​சன் ரெட்டி போட்​டி​யிடு​கிறார். பல்​வேறு அரசி​யல் தலை​வர்​களை சந்​தித்து ஆதரவு கேட்டு வந்த அவர், ராஷ்ட்​ரிய ஜனதா தளம் தலை​வர் லாலு பிர​சாத் யாதவை​யும் சந்​தித்​தார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலை​வர் ரவி சங்​கர் பிர​சாத் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நாட்​டின் ஆன்​மாவை காப்​பாற்ற எனக்கு வாக்​களி​யுங்​கள் என்று சுதர்​சன் ரெட்டி ஓர் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளார். ஆனால் கால்​நடை தீவன ஊழலில் தண்​டனை பெற்ற லாலுவை அவர் சந்​தித்​துள்​ளார்.

ஊழலில் தண்​டனை பெற்ற ஒரு​வரை சந்​திக்​கிறீர்​கள் என்​றால் எப்​படிப்​பட்ட நீதிபதி நீங்​கள்? தயவுசெய்து தேசத்​தின் ஆன்மா பற்றி பேசாதீர்​கள்” என்​றார். பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வி​யா​வும் இந்த சந்​திப்பு குறித்து விமர்​சனம்​ செய்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x