Published : 08 Sep 2025 08:31 AM
Last Updated : 08 Sep 2025 08:31 AM

பாலியல் வன்கொடுமையை மறைக்க ஒடிசா மதரஸாவில் படிக்கும் மாணவன் கொலை: சக மாணவர்கள் 5 பேர் கைது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்​தில் உள்ள மதரஸா ஒன்​றில் 16 மாணவர்​கள் படிக்​கின்​றனர். இங்கு பயிலும் சிறு​வனை, அங்கு படிக்​கும் மற்ற மாணவர்​கள் 5 பேர் கடந்த 6 மாத​மாக தகாத உறவுக்கு உட்​படுத்​தி​யுள்​ளனர்.

இது குறித்து தனது பெற்​றோரிடம் புகார் தெரிவிக்​கப்​போவ​தாக சிறு​வன் மிரட்​டி​யுள்​ளான். இதனால் அந்த சிறு​வனை கொலை செய்ய மதரஸா மாண வர்​கள் 5 பேர் முயற்​சித்​தனர். சில நாட்​களுக்கு முன் அந்த சிறு​வனை தண்​ணீர் தொட்​டி​யில் தள்ளி கொலை செய்ய முயற்​சித்​தனர்.

ஆனால் அந்த சிறு​வன் தலை​யில் சிறு காயத்​துடன் தப்​பி​விட்​டான். இந்​நிலை​யில் கடந்த 2-ம் தேதி​யும், அந்த சிறு​வனை 2 மாணவர்​கள் பாலியல் வன்​கொடுமைக்கு செய்​துள்​ளனர். அதன்​பின் சிறு​வனின் கழுத்தை பிடித்து நெரித்து தண்​ணீர் தொட்​டி​யில் அழுத்தி கொலை செய்​துள்​ளனர்.

இதையடுத்து மதரஸாவில் படித்த தங்​களது மகனை காண​வில்லை என போலீ​ஸில் பெற்றோர் புகார் கொடுத்​தனர். அவனது உடல் மதரஸா அரு​கில் உள்ள தண்​ணீர் தொட்​டிக்​குள் கிடந்​தது. இச்​சம்​பவம் தொடர்​பாக மதரஸா​வில் படிக்​கும் 5 மாணவர்​களை போலீ​ஸார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்​தனர். அவர்​கள் தற்​போது சிறார்​ சீர்​திருத்​த பள்​ளி​யில்​ அடைக்​கப்​பட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x