Published : 08 Sep 2025 08:28 AM
Last Updated : 08 Sep 2025 08:28 AM

கேரள கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் மலர் கம்பளம்: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்​தில் உள்ள பார்த்​த​சா​ரதி கோயி​லின் பிர​காரத்​தில் ஆஎஸ்​எஸ் கொடி​யுடன் ஆபரே ஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கிய அக்​கட்​சி​ தொண்​டர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

இதுகுறித்து போலீ​ஸார் கூறுகை​யில், “இந்த பகு​தி​யில் கம்​யூனிஸ்ட் (சிபிஐஎம்) கட்​சி​யினருக்​கும், பாஜக​வினருக்​கும் இடையே ஏற்​கெனவே பல்​வேறு மோதல்​கள் ஏற்​பட்​டுள்​ளன. எனவே, அவர்​களிடம் இந்த பதற்​றம் நிறைந்த பகு​தி​யில் கொடியோ அல்​லது வேறு ஏதும் அடை​யாளத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் மலர் அலங்​கரிப்​பு​களோ வைக்​கக்​கூ​டாது என்று ஏற்​கெனவே அவர்​களிடம் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. அதனை மீறி பாஜக​வினர் இந்த மலர் கம்​பளத்தை உரு​வாக்​கி​யுள்​ளனர்.

இதன் காரண​மாக, இருதரப்​பினரிடையே கலவரத்தை தூண்​டும் வகை​யில் செயல்​பட்​ட​தாக கூறி ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​களு​டன் சேர்த்து மேலும் 25 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது’’ என்​றனர்.

எப்​ஐஆரை திரும்​பப் பெறுக: ஆர்​எஸ்​எஸ் தொண்​டர்​கள் மீது போடப்​பட்ட எப்​ஐஆரை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும் என கேரள மாநில பாஜக தலை​வர் ராஜீவ் சந்​திரசேகர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: இது கேரளா. இந்​தி​யா​வின் ஒரு பகு​தி​யாக இருப்​ப​தில் பெருமை கொள்கிறோம். எனவே, ஆபரஷன் சிந்​தூர் பெயரில் மலர் கம்​பளம் உரு​வாக்​கியதற்​காக எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளதை ஏற்க முடியாது.

26 அப்​பாவி​கள் கொல்​லப்​பட்​டதற்கு பழி​வாங்​கவே ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது. அது நமது ராணுவத்​தின் வீரம் மற்​றும் வலிமை​யின் அடை​யாளம். அதனை அவம​திக்​கும வகை​யில் கேரள போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது கண்​டிக்​கத்​தக்​கது. அதனை உடனடி​யாக திரும்​பப் பெற வேண்​டும். இவ்​வாறு ராஜீவ்​ சந்​திரசேகர்​ தெரி​வித்​துள்​ளார்​

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x