Published : 08 Sep 2025 12:09 AM
Last Updated : 08 Sep 2025 12:09 AM
பெங்களூரு: பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறையில் நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.522 வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாலியல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இங்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, படிக்க வழங்கப்பட்ட புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். இதற்காக அவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.522 சம்பளம் தரப்படுகிறது.
சிறை விதிகளின்படி, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏதேனும் ஒரு வகையான உழைப்பைச் செய்ய வேண்டும், மேலும் அவர்களது திறமைகள் மற்றும் விருப்பத்தை பொருத்து சிறையில் பணிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நிர்வாகப் பணிகளை கையாள்வதில் ரேவண்ணா அதிக ஆர்வம் காட்டி வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சிறை நிர்வாகம் அவருக்கு நூலகப் பணியை வழங்கியுள்ளது.முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாஎன்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT