Published : 07 Sep 2025 07:20 AM
Last Updated : 07 Sep 2025 07:20 AM
புதுடெல்லி: ஜைனர்களின் மத நிகழ்ச்சியில் துறவி போல் வந்த மர்ம நபர், 2 தங்க கலசங்களை திருடி சென்றது பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
டெல்லி செங்கோட்டை வளாகத்தில் ஜைன மதத்தினரின் 10 நாள் மத நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. ஜைனர் களின் 10 தர்மங்கள் (தஸ்லக் ஷன் பர்வா) தொடர்பான 10 நாள் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதச் சடங்குகள், பூஜைகள் செய் வதற்காக தொழிலதிபர் சுதிர் ஜெயின் என்பவர் தினமும் 2 தங்க கலசங்களை கொண்டு வருவார். அந்த கலசங்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக் கப்பட்டிருக்கும்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத கொண் டாட்டத்தின் போது மேடையில் வைத்திருந்த 2 தங்க கலசங்கள் திருடு போயின. அதன் மதிப்பு ரூ.1.5 கோடி நிகழ்ச்சியில் பங் கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதில் நிர்வாகிகள் கவனமாக இருந்தபோது, இந்த திருட்டு நடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக "போலீஸில் புகார் அளிக்கப்பட் டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஜைன துறவி போல் வந்த ஒருவர், மிகப் பெரிய பையை எடுத்துச் செல் வது தெரிய வந்தது. அவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், விரைவில் கைது செய்வோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுதிர் கூறும் போது, "மதச் சடங்குகள் செய் வதற்காக தங்க கலசங்களை தினமும் கொண்டு வருவேன். அதில் அழகுக்காக விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட் டிருக்கும். அது பற்றியோ, அல் லது விலை பற்றியோ கவலை யில்லை. ஆனால், அந்த தங்க கலசங்கள் புனிதமானவை" என் றார்.
ஜைனர்களின் மத கொண்டாட் டம் வரும் செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது. அன் றைய தினம் சிறப்பு விருந்தின ராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்க இருப்பது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT