Published : 06 Sep 2025 08:06 AM
Last Updated : 06 Sep 2025 08:06 AM

அதிபர் ட்ரம்ப் விதித்த 50% வரி குறுகிய காலம்​தான் நீடிக்​கும்: பொருளா​தார ஆலோ​சகர் கருத்து 

புதுடெல்லி: பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள 50 சதவீத வரி நீண்ட காலம் நீடிக்​காது என நினைக்​கிறேன். இந்​தியா மீது அதிக வரி விதிப்​பது எதிர்​பார்த்த பலனை தராது என்​பதை அமெரிக்கா உணரத் தொடங்​கி​யுள்​ளது. உள்​நாட்​டில் ஜிஎஸ்டி வரியை மத்​திய அரசு குறைத்​துள்​ளது. இதுநாட்​டில் நுகர்வை அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​கா​வின் அதிக வரி விதிப்​பால் ஏற்​படும் ஏற்​றுமதி இழப்​பை, உள்​நாட்டு நுகர்வு அதி​கரிப்பு ஈடு​செய்​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பெரும்​பாலான பொருட்​களுக்​கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்​திலிருந்து 5 சதவீத​மாக குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், உள்​நாட்டு நுகர்வு அதி​கரித்​து, ஏற்​றுமதி பாதிப்பை குறைக்​கும்.

இந்த நிதி​யாண்​டில் முதல் 4 மாதத்​தில், வரி இல்​லாமல் ஏற்​றுமதி நடை​பெற்றது. அமெரிக்​கா​வின் கூடு​தல் 25 சதவீத வரி விதிப்​பால் ஏற்​படும் தாக்​கம், இந்த நிதி​யாண்​டின் இரண்​டாவது பாதி​யில் தெரிய​வரும். அதனால், உள்​நாட்​டில் நுகர்வை அதி​கரிப்​பது​தான், நாம் மேற்​கொள்ள வேண்​டிய கடுமை​யான பணி. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x