Published : 06 Sep 2025 07:59 AM
Last Updated : 06 Sep 2025 07:59 AM

தொழிலதிபரிடம் ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்​-அவுட் நோட்டீஸ்

மும்பை: ரூ.60 கோடி மோசடி வழக்​கில் பாலிவுட் நடிகர் ஷில்பா ஷெட்​டி, அவரது கணவர் ராஜ் குந்த்​ரா​வுக்கு எதிராக லுக் அவுட் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது.கர்​நாடக மாநிலத்​தைச் சேர்ந்​தவர் நடிகை ஷில்பா ஷெட்​டி. மகா​ராஷ்டிர மாநிலத்​தில் குடியேறி பாலிவுட் படங்​களில் நடித்து வரு​கிறார்.

அவர், தனது கணவர் ராஜ் குந்த்​ரா​வுடன் மகா​ராஷ்டி​ரா​வின் மும்​பை​யில் வசித்து வரு​கிறார். இவர்​கள் இரு​வரும், தன்​னிடம் பெற்ற ரூ.60 கோடியை தராமல் மோசடி செய்​த​தாக மும்பை போலீ​ஸில் தொழில​திபர் தீபக் கோத்​தா​ரி(60) என்​பவர் புகாரளித்​தார்.

அந்த புகாரில் அவர் கூறி​யுள்​ள​தாவது: 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை பெஸ்ட் டீல் ‘டி​வி’ என்​னும் நிறு​வனத்​துக்கு ரூ.60 கோடியை கடனாக வாங்கி விட்​டு, பின்​னர் அந்த நிறு​வனம் திவாலாகி விட்​ட​தாக நடிகை ஷில்பா ஷெட்​டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர். ஆனால், என்​னிடம் வாங்​கிய ரூ.60 கோடியை, வேறு நிறு​வனங்​களில் ஷில்பா - ராஜ் தம்​ப​தி​யினர் முதலீடு செய்​துள்​ளனர். வணிக விரி​வாக்​கம் என்ற போலிக்​காரணத்​தைக் கூறி இந்த நிதியை வாங்​கி​யுள்​ளனர்.

ஆனால், உண்​மை​யில் தங்​களது தனிப்​பட்ட செல​வு​களுக்கு இந்த நிதியை பயன்​படுத்​தி​யுள்​ளனர். அவர்​களிட​மிருந்து ரூ.60 கோடியைப் பெற்​றுத் தரவேண்​டும். இவ்​வாறு அவர் அதில் கூறி​யிருந்​தார். இதைத் தொடர்ந்​து, ஷில்பா ஷெட்​டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதனிடையே, நடிகை ஷில்பா ஷெட்​டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா இரு​வரும் வெளி​நாட்​டுக்​குச் தப்பி சென்று விடா​மல் இருக்க லுக் அவுட் நோட்​டீஸை மும்பை போலீ​ஸார் பிறப்​பித்​துள்​ளனர். இரு​வரும் அடிக்​கடி வெளி​நாட்டு பயணம் மேற்​கொள்​வ​தால், வழக்​கின் விசா​ரணையை சுமூக​மாக நடத்​து​வதற்கு உதவி​யாக இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

ஆனால், தங்​கள் மீது கொடுக்​கப்​பட்ட புகார் அடிப்​படை ஆதா​ர மற்​றது என்​றும், தங்​களது புகழைக் கெடுக்க செய்​யப்​பட்ட சதி என்​றும் நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x