Published : 06 Sep 2025 07:51 AM
Last Updated : 06 Sep 2025 07:51 AM

400 கிலோ ஆர்​டிஎக்ஸ் வெடிபொருட்களுடன் 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள்: மும்பையைத் தாக்கி அழிக்கப் போவதாக மிரட்டல்

மும்பை: மனித வெடிகுண்​டு​களு​டன் 34 வாக​னங்​கள் தயார் நிலை​யில் நகருக்​குள் நுழைந்​துள்​ள​தாக​வும், மும்​பையைத் தாக்கி அழிக்​கப் போவ​தாக​வும் மிரட்​டல்​கள் வந்​துள்​ளன. மகா​ராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்​துக்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்​துள்​ளது. அதில் 400 கிலோ ஆர்​டிஎக்ஸ் வெடிமருந்​துகளை நிரப்​பிய 34 வாக​னங்​கள் மும்பை நகருக்​குள் நுழைந்து இருப்​ப​தாக​வும், அது வெடித்​தால் மொத்த மும்பை நகர​மும் அழிந்து விடும் என்று மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

மேலும், மும்பை போக்​கு​வரத்து போலீ​ஸாரின் வாட்​ஸ்​அப் நம்​பருக்​கும் இந்த அச்​சுறுத்​தல் வந்​துள்​ளது. மேலும், அந்த மிரட்​டல் செய்​தி​யில், லஷ்கர்​-இ-ஜிஹாதி அமைப்​பைச் சேர்ந்த 14 பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இந்​தி​யா​வில் நுழைந்து இந்த தாக்​குதலை நிகழ்த்த இருப்​ப​தாக​வும் தெரி​வித்​துள்​ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்​துள்ள மும்பை போலீ​ஸார், மாநிலம் முழு​வதும் பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளனர். மேலும், இந்த மிரட்​டல் குறித்து தீவிர விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளனர்.

விநாயகர் ஊர்​வலம்: மும்​பை​யில் விநாயகர் சதுர்த்தி திரு​நாள் கொண்​டாட்​டம் முடிவடை​யும் நிலை​யில், சனிக்​கிழமை தினத்​தில் நீர்​நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்​கும் நிகழ்​வு​கள் நடை​பெறும். இந்த நாளை ஆனந்த் சதுர்த்தி என்ற பெயரில் மும்பை மக்​கள் கொண்​டாடு​கின்​றனர். வழக்​க​மாக விநாயகர் சதுர்த்தி பண்​டிகை முடிந்த 10 அல்​லது 11-வது நாளில் மும்பை நகரில் வைக்​கப்​பட்​டுள்ள விநாயகர் சிலைகள் கடலில் கரைக்​கப்​படும்.

இன்று ஆனந்த் சதுர்த்​தி (செப்​டம்​பர் 6) நாளன்று இந்த மிரட்​டல் செய்து வந்​துள்​ள​தால் நகரில் உள்ள போலீ​ஸார் அனை​வரும் உஷார்​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.மும்பை நகரின் குற்​றப்​பிரிவு, தீவிர​வாத எதிர்ப்​புப் படை (ஏடிஎஸ்), இதர போலீ​ஸார் பிரி​வினர் அனை​வரும் இணைந்து தற்​போது பாது​காப்​பைப் பலப்​படுத்​தி​யுள்​ளனர்.

ஒரு கோடி பேரை கொல்ல சதி: 400 கிலோ எடை​யுளள ஆர்​டிஎக்ஸ் என்ற வெடிபொருட்​களு​டன் 34 வாக​னங்​கள் மும்​பை​யில் நுழைந்​துள்​ளது என்ற தகவலால் நகர் முழு​வதும் போலீ​ஸார் உஷார்​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இந்த 400 கிலோ எடை​யுள்ள வெடிபொருட்​கள் வாக​னத்​துடன் மோதி​னால் நகரில் ஒரு கோடி பேரை கொன்​று​விடு​வோம் என்று அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இது​போன்ற எந்​த​வித​மான மிரட்​டலை​யும் எங்​கள் போலீ​ஸார் கையாள்​வர். நகரின் முக்​கிய பகு​தி​களில் கூடு​தல் போலீ​ஸார் நிறுத்​தப்​பட்​டுள்​ளனர். சந்​தேகத்​துக்கு இடமாகத் திரி​யும் நபர்​கள், வாக​னங்​களை நிறுத்தி சோதனை​யிட்டு வரு​கிறோம். அனைத்து கோணங்​களி​லும் வி​சா​ரணை துரிதப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும்​ முக்​கிய கட்​டிடங்​களி​லும்​ சோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x