Published : 05 Sep 2025 07:30 AM
Last Updated : 05 Sep 2025 07:30 AM
பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நடைபெற்றது. இந்நிலையில், தர்பங்கா நகரில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற ஒருவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 25 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அவரது தயார் பற்றி அவதூறாக பேசியதைக் கண்டித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) சார்பில் பிஹாரில் நேற்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காலை 7 மணி முதல் 12 மணிவரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். 5 மணி நேரம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகளைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியடி கோஷம் எழுப்பப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT