Published : 05 Sep 2025 07:26 AM
Last Updated : 05 Sep 2025 07:26 AM

இந்தியாவில் 2013-ல் 40 ஆக இருந்த சிசு மரணம் 25 ஆக குறைந்தது

புதுடெல்லி: இந்​தி​யா​வில் கடந்த 2013-ல் 40 ஆக இருந்த குழந்​தைகள் இறப்பு விகிதம் 10 ஆண்​டு​களில் அதாவது 2023-ல் 25 ஆக குறைந்​துள்​ளது. குழந்தை இறப்பு விகிதம் (infant mortality rate – IMR) என்​பது ஒரு வருடத்​தில் உயிருடன் பிறந்த 1,000 குழந்​தைகளில் ஒரு வயதுக்​குள் இறக்​கும் குழந்​தைகளின் எண்​ணிக்​கையை குறிக்​கிறது. இது ஒரு நாட்​டின் அல்​லது பிராந்​தி​யத்​தின் சுகா​தார அமைப்​பின் செயல்​திறன் மற்​றும் மக்​களின் கல்வி, சமூகப் பொருளா​தார நிலையை காட்​டு​கிறது.

இந்​நிலை​யில் இந்​தி​யப் பதி​வாளர் ஜெனரல் அலு​வலம் வெளி​யிட்​டுள்ள 2023-ம் ஆண்​டுக்​கான எஸ்​ஆர்​எஸ் அறிக்​கை​யின்​படி கடந்த 2013-ல் 40 ஆக இருந்த ஐஎம்​ஆர் 2023-ல் 25 ஆக குறைந்​துள்​ளது. அதாவது 37.5 சதவீதம் சரிந்​துள்​ளது. மேலும் 1971-ல் 129 ஆக இருந்த ஐஎம்​ஆர் வியக்​கத்​தக்க வகை​யில் 80 சதவீதம் சரிந்​துள்​ளது.

2023 அறிக்​கை​யின்​படி நாட்​டிலேயே அதி​கபட்​ச​மாக மத்​தி​யபிரதேசம், சத்​தீஸ்​கர், உத்​தரபிரதேசம் ஆகிய மாநிலங்​களில் ஐஎம்​ஆர் 37 ஆக உள்​ளது. குறைந்​த​பட்​ச​மாக மணிப்​பூரில் 3 ஆக உள்​ளது. மிகப் பெரிய மாநிலங்​களில் கேரளா​வில் மட்​டும் ஐஎம்​ஆர் ஒற்றை இலக்​கத்​தில் 5 ஆக உள்​ளது. இம்​மாநிலம் மணிப்​பூருக்கு பிறகு இரண்​டாவது இடத்​தில்​ உள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x