Published : 05 Sep 2025 07:10 AM
Last Updated : 05 Sep 2025 07:10 AM

குடியுரிமைக்கு முன்பாகவே வாக்காளர் ஆனதாக சோனியா காந்திக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்​பாகவே தனது பெயரை போலி​யாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​துள்​ள​தாக காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு எதி​ராக டெல்லி கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக விகாஸ் திரி​பாதி என்​பவர் டெல்லி ரோஸ் அவென்யூ பகு​தி​யில் உள்ள கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யுள்​ள​தாவது:

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​திக்கு இந்​திய குடியுரிமை கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் வழங்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், புதுடெல்லி சட்​டப்​பேரவை தொகு​திக்​கான வாக்​காளர் பட்​டியலில் அவரது பெயர் கடந்த 1980-ம் ஆண்டே இடம்​பெற்​றுள்​ளது. கடந்த 1980-ம் ஆண்டு போலி ஆவணங்​கள் மூல​மாக அவரது பெயர் வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கப்​பட்டு இருக்​கலாம் என்​ப​தால் இதுதொடர்​பாக சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்து விசா​ரிக்க போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும்.

இவ்​வாறு அதில் கோரி​யிருந்​தார். மனுவை விசா​ரித்த மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நடு​வர் வைபவ் சவு​ராஸி​யா, வழக்கு வி​சா​ரணையை வரும் 10-ம் தேதிக்​கு தள்​ளி​வைத்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x