Published : 05 Sep 2025 06:17 AM
Last Updated : 05 Sep 2025 06:17 AM

பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு: இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

புதுடெல்லி: பிரதமர் நரேந்​திர மோடியை சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் டெல்​லி​யில் நேற்று சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

சிங்​கப்​பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்​கள் பயண​மாக டெல்லி வந்​துள்​ளார். அவருடன் வெளி​யுறவுத் துறை அமைச்​சர் விவியன் பால​கிருஷ்ணன், நிதித் துறை அமைச்​சர் ஜெப்​ரி, வர்த்தக துறை அமைச்​சர் கான் சியோ ஹுவாங் ஆகியோ​ரும் இந்​தியா வந்​துள்​ளனர்.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் உள்​ளிட்​டோரை சிங்​கப்​பூர் பிரதமர் வாங் சந்​தித்​து பேசி​னார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்​திர மோடியை டெல்​லி​யில் நேற்று அவர் சந்​தித்​து பேசி​னார். அப்​போது இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே 5 முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக சுற்​றுச்​சூழலுக்கு மாசு இல்​லாத கப்​பல் போக்​கு​வரத்​து, விமான போக்​கு​வரத்து பயிற்​சி, செமி கண்​டக்​டர் உள்​ளிட்ட துறை​களில் திறன்​சார் பயிற்​சி, செயற்​கைக்​கோள் தகவல் பரி​மாற்​றம், வங்​கி, முதலீடு சார்ந்த தகவல் பரி​மாற்​றம் ஆகியவை தொடர்​பாக ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகி உள்​ளன. இதன்​பிறகு இரு தலை​வர்​களும் கூட்டாக நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தனர். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடி கூறிய​தாவது:

தென்​கிழக்கு ஆசிய பிராந்​தி​யத்​தில் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய வர்த்தக கூட்​டாளி​யாக சிங்​கப்​பூர் விளங்​கு​கிறது. பாது​காப்பு துறை​யில் இரு நாடு​கள் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. பசுமை கப்​பல் போக்​கு​வரத்​து, திறன் மேம்​பாடு, சிவில் அணு சக்​தி, நகர்ப்​புற நீர் மேலாண்​மை, செமி கண்​டக்​டர் உற்​பத்​தி, தொழில்​நுட்​பம், புதுமை கண்​டு​பிடிப்​பு, செயற்கை நுண்​ணறி​வு, குவாண்​டம், டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், விண்​வெளி ஆகிய துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும்.

இந்​தி​யா​வின் யுபிஐ, சிங்​கப்​பூரின் பே நவ் டிஜிட்​டல் பரிவர்த்​தனை கட்​டமைப்​பு​கள் வெற்​றிகர​மாக இணைக்​கப்​பட்டு உள்​ளன. இந்​திய துறை​முகங்​களின் கட்​டமைப்​பு​களை விரிவுபடுத்த திட்​ட​மிட்டு உள்​ளோம். இந்​த துறை​யில் சிங்​கப்​பூரின் நிபுணத்​து​வம் இந்​தி​யா​வுக்கு பயனுள்​ள​தாக இருக்​கும். சிங்​கப்​பூரின் பிஎஸ்ஏ இன்​டர்​நேஷனல் நிறு​வனம் மும்பை துறை​முகத்​தில் உரு​வாக்​கிய புதிய முனை​யம் இன்று தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் மும்பை துறை​முகத்​தின் சரக்​கு​களை கையாளும் திறன் மேலும் அதி​கரிக்​கப்​பட்டு உள்​ளது.

இந்​திய, பசிபிக் பிராந்​தி​யத்​தில் அமை​தி, ஸ்திரத்​தன்​மையை நிலை​நாட்​டு​வ​தில் இந்​தி​யா​வும் சிங்​கப்​பூரும் இணைந்து செயல்​படும். சிங்​கப்​பூர் மற்​றும் ஆசி​யான் கூட்​டமைப்​புடன் ஒத்​துழைப்பு மேம்​படுத்​தப்​படும். சர்​வ​தேச தீவிர​வாதத்​துக்கு எதி​ராக இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். பஹல்​காம் தாக்​குதலை கண்​டித்த சிங்​கப்​பூர் அரசுக்கு மனதார நன்றியை தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்​போது, “இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே நெருங்​கிய நட்​புறவு நீடிக்​கிறது. உலகின் பல்​வேறு பகு​தி​களில் நிலை​யற்​றதன்மை காணப்​படு​கிறது. இந்த காலத்​தில் இந்​தி​யா, சிங்​கப்​பூர் உறவு மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்று இருக்​கிறது. விமான போக்​கு​வரத்​து, செமி கண்​டக்​டர் துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். குஜ​ராத்​தின் கிப்ட் சிட்டி இந்​தி​யா, சிங்​கப்​பூர் இடையே பால​மாக செயல்​படு​கிறது” என்று தெரி​வித்​தார்.

சென்னையில் பயிற்சி மையம்: கடந்த பிப்​ர​வரி​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட மத்​திய பட்​ஜெட்​டில் சென்​னை, ஹைத​ரா​பாத், புவனேஸ்​வர், கான்​பூர், லூதி​யானா நகரங்​களில் தேசிய திறன் பயிற்சி மையங்​கள் அமைக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​படும். இந்த திட்​டம் ரூ.60,000 கோடி மதிப்​பில் செயல்​படுத்​தப்பட உள்​ளது. இதன்​படி மத்​திய அரசு சார்​பில் ரூ.30,000 கோடி, மாநில அரசுகள் சார்​பில் ரூ.20,000 கோடி, தொழில் நிறு​வனங்​கள் சார்​பில் ரூ.10,000 கோடி முதலீடு செய்​யப்பட உள்​ளது.

இதில் சென்​னை​யில் அமைய உள்ள திறன் பயிற்சி மையத்தை நிறுவ சிங்​கப்​பூர் அரசு ஒத்​துழைப்பு அளிக்​கும் என்று பிரதமர் மோடி நேற்று அறி​வித்​தார். இது தொடர்​பாக சிங்​கப்​பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் கூறும்​போது, “இந்​தி​யா​வின் திறன் மேம்​பாட்டு திட்​டங்​களுக்கு சிங்​கப்​பூர் தொடர்ந்து ஆதரவு அளிக்​கும். சென்​னை​யில் திறன் பயிற்சி மையம் அமைக்க சிங்​கப்​பூர் அரசு உதவி செய்​யும். இந்த திட்​டத்​தில் பங்​கேற்க வாய்ப்​பு அளித்​த பிரதமர்​ மோடிக்​கு நன்​றியை தெரி​வித்​துக் ​கொள்​கிறேன்​” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x