Published : 04 Sep 2025 08:28 AM
Last Updated : 04 Sep 2025 08:28 AM

எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் கவிதா

ஹைதராபாத்: பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்​திரசேகர ராவ் தனது மகளும் தெலங்​கானா மேலவை உறுப்​பினரு​மான கவி​தாவை நேற்று முன்தினம் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​தார்.

இந்​நிலை​யில் கவிதா நேற்று ஹைத​ரா​பாத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: நான் பிஆர்​எஸ் கட்​சி​யின் அடிப்​படை உறுப்பினர் மற்​றும் மேலவை உறுப்​பினர் (எம்எல்சி) பொறுப்​பில் இருந்து வில​கு​கிறேன்.

ஹரீஷ்​ராவ், சந்​தோஷ் ஒரு​புற​மும் காங்​கிரஸ், பாஜக​வினர் மற்​றொரு புற​மும் வியூ​கம் வகுத்து என்னை வீழ்த்தி உள்​ளனர். இது இத்​துடன் நிற்​காது. தந்​தையே நீங்​களும் அரசியல் துரோகிகளிடம் ஜாக்​கிரதை​யாக இருக்க வேண்​டும். இவ்​வாறு கவி​தா கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x