Published : 03 Sep 2025 08:00 AM
Last Updated : 03 Sep 2025 08:00 AM

அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் வரி உயர்வு அறி​விப்​பைத் தொடர்ந்​து, நாட்​டில் சுயசார்பு இந்தியா (ஆத்ம நிர்​பார்) சபதம் ஏற்கும் பிரச்​சா​ரத்தை பாஜக தொடங்​க​வுள்​ளது.

பாஜக சார்​பில் செப்​டம்​பர் முதல் டிசம்​பர் வரை 3 மாதங்​களுக்கு இந்​தப் பிரச்​சா​ரம் நடைபெறும். இந்​தப் பிரச்​சா​ரத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யின் சுதேசி நோக்​குள்ள திட்​டங்​கள், ஆத்ம சுய​சார்பு திட்​டங்​கள் குறித்த விளக்​கங்​கள் இடம்​பெறும்.

தீன்​த​யாள் உபாத்​யா​யா​வின் பிறந்​த​நாள் கொண்​டாட்​டத்​துடன் செட்​பம்​பர் 25-ம் தேதி தொடங்​கும் இந்​தப் பிரச்​சா​ரம் முன்​னாள் பிரதமர் வாஜ்​பா​யி​யின் பிறந்​த​நாளான டிசம்​பர் 25-ம் தேதி​யுடன் நிறைவுறும். உள்​நாட்டு வியா​பாரி​களுக்​காக குரல் கொடுங்​கள் என்ற நோக்​கத்​துடன் தேசிய அளவில் இந்​தப் பிரச்​சா​ரத்தை பாஜக முன்​னெடுத்​துச் செல்​ல​வுள்​ளது.

அமெரிக்க நாட்​டில் இந்​தி​யப் பொருட்​களுக்கு வரி​வி​திப்பை அதி​க​மாக்​கி​யுள்ள நிலை​யில், உள்​நாட்​டிலேயே நமது வர்த்​தகர்​கள் சுய​சார்​படைய உதவும் நோக்​கில் இந்​தப் பிரச்​சா​ரம் நடை​பெறவுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x