Published : 03 Sep 2025 05:31 AM
Last Updated : 03 Sep 2025 05:31 AM

மசோதாக்களை செயலற்றதாக்க சட்டப்பேரவைக்கு மட்டுமே அதிகாரம்; ஆளுநருக்கு இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: ஏகமன​தாக நிறைவேற்​றப்​படும் மசோ​தாக்​களை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்​ளது என்​றும் ஆளுநருக்கு அந்த அதி​காரம் இல்லை என்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வாதிட்​டது. சட்ட மசோ​தாக்​களுக்கு ஒப்புதல் அளிக்​கும் விவ​காரத்​தில் ஆளுநருக்​கும், குடியரசு தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் உத்தரவிட்டது.

இதுதொடர்​பாக குடியரசுத் தலை​வர் எழுப்​பிய 14 கேள்வி​கள் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்.க​வாய், சூர்​ய​காந்த் உள்​ளிட்ட 5 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனுசிங்​வி, சட்​டப்​பேர​வை​யில் அமைச்​சர​வை​யின் ஒப்​புதல்​படி ஏகமன​தாக நிறைவேற்​றப்​பட்ட ஒரு மசோ​தாவை செயலற்​ற​தாக்​கும் அதி​காரம் சட்​டப்​பேர​வைக்​குத்​தான் உள்ளதேயன்றி, ஆளுநருக்கு அந்த அதி​காரம் கிடை​யாது.

இதனால் மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிப்​பது தொடர்​பாக ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் கால நிர்​ண​யம் செய்து உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் எந்த தவறும் இல்​லை.

இந்த விவ​காரத்​தில் எப்​போது தலை​யிட வேண்​டும், எப்​போது தலை​யிடக்​கூ​டாது என்​பது உச்ச நீதி​மன்​றத்​துக்கு நன்​றாகத் தெரியும். ஆளுநர்​கள், குடியரசுத் தலை​வரின் முடிவு​களை நீதி​மன்ற விசா​ரணைக்கு உட்​படுத்த முடி​யாது என்ற மத்​திய அரசின் வாதம் ஏற்​புடையதல்ல.

மசோ​தாக்​கள் மீது இறுதி முடிவு எடுக்​கும் நீதிப​தி​யாகவோ அல்​லது சூப்​பர் முதல்​வ​ராகவோ ஆளுநர் செயல்பட முடி​யாது. நிறைவேற்​றப்​படும் மசோதா சட்​டத்​துக்கு முரணானது என்​றால் அதை நீதி​மன்​றம் பார்த்​துக்​கொள்​ளும். அது​தான் அதி​காரப்​பிரி​வினை.

மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் ஆளுநர் கிடப்​பில் போடு​வதை எதிர்த்து ஒவ்​வொரு முறை​யும் சம்​பந்​தப்​பட்ட மாநில அரசு உச்ச நீதி​மன்​றத்தை நாடி பாி​காரம் தேட முடி​யாது. எந்த மசோ​தாக்​களை​யும் தனித்​தனி​யாக பிரித்​துப் பார்க்க முடி​யாது. இதுதொடர்​பாக அரசி​யலமைப்பு சட்​டத்​தி​லும் உரிய திருத்​தங்​களைக் கொண்டு வர வேண்​டும்.

அது​போன்ற திருத்​தங்​கள் இல்லை என்​ப​தால் தான் உச்ச நீதி​மன்​றமே தனக்​குரிய அதி​காரத்​தைப் பயன்​படுத்தி இது​போன்ற காலநிர்​ண​யத்தை செய்​துள்​ளது. ஒரு​வேளை குறிப்​பிட்ட கால அளவைத்​தாண்டி ஆளுநர் கிடப்​பில் போட்​ட​டால் அந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளித்​த​தாக கருதப்பட வேண்​டும், என வாதிட்​டார்.

அப்​போது நீதிபதி விக்​ரம்​நாத் குறுக்​கிட்​டு, இந்த விவ​காரத்​தில் ஆளுநருக்​குள்ள மூன்று வாய்ப்​பு​கள் குறித்து உச்ச நீதி​மன்​றமே ஏன் ஆராயக்​கூ​டாது என்​றார். அதற்கு தமிழக அரசு தரப்​பில், ‘‘மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​கக்​கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்​கல் செய்​தால் விசா​ரித்து தீர்ப்​பளிக்க ஓராண்​டாகி​விடும். உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​தால் 3 ஆண்டுகளாகிவிடும்.

இந்த கால அவகாசம் ஆளுநருக்கு வீட்டோ அதி​காரத்தை தரும். இதன்​மூலம் உச்ச நீதி​மன்​றம் காலக்​கெடு விதித்து பிறப்​பித்த உத்​தர​வால் பலன் இல்​லாமல் போய்​விடும், என வாதிடப்​பட்​டது. இதே​போல மேற்​கு​வங்க மாநிலம் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் கபில்​சிபில் ஆஜராகி, நாட்​டின் எதிர்​காலத்தை இந்த விவ​காரத்தை விசா​ரிக்​கும் உச்ச நீதி​மன்ற அரசி​யல் சாசன அமர்வு தீர்​மானிக்க வேண்​டும்.

ஆளுநருக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கும் அதி​காரத்தை விருப்​புரிமை​யாகக் கொள்​ளாமல் பொறுப்​புடைமை​யாகக் கருத வேண்​டும். மசோ​தாவை மாதக்​கணக்​கில் நிறுத்தி வைக்​கும் ஆளுநருக்​கான அதி​காரம் கட்​டற்​றது என்​றால் அபத்​த​மாகி​விடும் என வா​திட்​டார். அதையடுத்​து நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கு வி​சா​ரணை​யை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x