Published : 02 Sep 2025 01:29 AM
Last Updated : 02 Sep 2025 01:29 AM

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை அஸ்ஸாமின் சில்சாருடன் இணைக்கும் வகையில் ரூ.8,071 கோடியில் பைரபி - சாய்ரங் புதிய ரயில் பாதை!

மிசோரம் தலைநகர் ஐஸ்வாலை இணைக்கும் பைரபி - சாய்ரங் வரையிலான 51.38 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி செப்.13-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்​களின் மாற்​றத்​துக்கு இந்​திய ரயில்வே குறிப்​பிடத்​தக்க பங்​களிப்பை வழங்கி வரு​கிறது. இத்​தகைய திட்​டங்​களில் வடகிழக்கு மாநில​மான மிசோரம் தலைநகரை இணைக்​கும் பைரபி - சாய்​ராங் புதிய பாதை ரயில் திட்​ட​மும் ஒன்​றாகும். மிசோரம் மாநிலம் மியான்​மர், வங்​கதேசம் ஆகிய நாடு​களு​ட​னும் திரிபு​ரா, அஸ்​ஸாம், மணிப்​பூர் ஆகிய மாநிலங்​களு​டனும் எல்​லையை பகிர்ந்து கொள்​கிறது.

இங்கு கடந்த 2014-ம் ஆண்டு வரை அஸ்​ஸாம் எல்​லை​யில் இருந்து சுமார் 5 கிமீ தொலை​வில் உள்ள பைரபிக்கு மட்​டுமே ரயில் பாதை அமைக்​கப்​பட்டு இருந்​தது. இதனால் சாலை மார்க்​கத்​தில் செல்ல பெரும் தொகை செல​விடும் நிலை இருந்து வந்​தது. இதையடுத்​து, ரயில் போக்​கு​வரத்தை ஏற்​படுத்​தும் வகை​யில், ரூ.8,071 கோடி​யில் 51.38 கிமீ நீளத்​தில் ரயில் பாதை அமைப்​ப​தற்​கான திட்​டம் கடந்த 2008-ல் அறிவிக்​கப்​பட்​டது. முதல்​கட்ட பணி​கள் நிறைவடைந்​து, பிர​தான பணி​கள் 2014-ல் தொடங்​கப்​பட்​டன. இந்த புதிய ரயில் பாதை, தலைநகர் ஐஸ்​வாலை அஸ்​ஸாமில் உள்ள சில்​சா​ருடன் இணைக்​கும் வகை​யில் அமைக்​கப்​பட்​டது.

நாட்​டின் வேறு எந்த ரயில் பாதை​யும் கொண்​டிருக்​காத வகை​யில் 48 சுரங்​கங்​கள், 55 பெரிய பாலங்​கள், 87 சிறிய பாலங்​கள் வழி​யாக ரயில் பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், குராங் ஆற்​றின் மீது, 371 மீ நீள​மும், 114 மீ உயர​மும் கொண்ட நாட்​டின் இரண்​டாவது உயர்ந்த ரயில் பால​மாக அமைக்​கப்​பட்​டுள்​ளது. இது குதுப் மினாரை விட 42 மீ உயரம் அதி​கம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலமே உலகள​வில் முதலா​வது உயர​மான பால​மாகும்.

இவ்​வாறான கட்​டு​மானங்​கள் மூலம் ரயில்வே பொறி​யியல் வரலாற்​றில் சவால் நிறைந்த பணி​யாக மிசோரம் மாநில ரயில் பாதை மாறி​யுள்​ளது. பைரபி​யில் தொடங்கி ஹார்​டு​கி, கவ்​னபுய், முகல்​காங், சாய்​ரங் ஆகிய ரயில் நிலை​யங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சோதனை ஓட்​டம் முடிந்து அனு​ம​தி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. பிரதமர் மோடி இம்​மாதம் 13-ம் தேதி நாட்​டுக்கு அர்ப்​பணிப்​பார் என தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுகுறித்து வடகிழக்கு எல்​லை​யோர ரயில்வே மண்டல மக்​கள் தொடர்பு அதி​காரி நிலஞ்​சன் தேப் கூறிய​தாவது: ஆண்​டுக்கு 4 மாதங்​கள் மட்​டுமே பணி​களை மேற்​கொள்ள முடிந்​தது. இது மிகப்​பெரிய சவாலாக இருந்​தது. கட்​டு​மான பொருட்​களை அஸ்​ஸாம், ஒடிசா போன்ற அண்டை மாநிலங்​களில் இருந்​து​தான் கொண்டு வரவேண்டி இருந்​தது. சுமார் 200-க்​கும் மேற்​பட்ட ஊழியர்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். மலைகளுக்​கிடையே ரயில் பாதை அமைக்​கப்​படு​வ​தால், அதற்​கான ஆயத்த பணி​களுக்கு சுமார் 200 கிமீ-க்கு சாலைகள் அமைக்​கப்​பட்​டன. ரயில்​பாதை திட்​டத்​தால் சுற்​றுலாபயணி​கள் வருகை அதி​கரிக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார் .

தெற்கு ரயில்வே தலைமை மக்​கள் தொடர்பு அதி​காரி செந்​தமிழ்ச்​செல்​வன் கூறும்​போது, "இந்த ரயில் போக்​கு​வரத்து வசதி​யால் பயண செலவு குறை​யும். மிசோரம் உட்பட வடகிழக்கு மாநிலங்​களில் இருந்து கல்​வி, மருத்​துவ சிகிச்​சைக்​காக தமிழகம் உள்ளிட்ட தென்​மாநிலங்​களுக்கு வரு​வோரின் எண்​ணிக்கை எதிர்​காலத்​தில் உயரும்​.இங்​கிருப்​பவர்​களும் சுற்​றுலா​வுக்​காக அங்கே செல்​வதற்கு வாய்ப்​பாக அமை​யும். இந்த புதிய ரயில் பாதையை மின்​மய​மாக்​கும் பணி தொடங்​கப்​பட்​டுள்​ளது. ஓராண்​டுக்​குள் நிறைவு செய்ய திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது" என்​றார்.

குறைந்த கட்​ட​ணம்: புதிய ரயில் பாதை மூலம் ரூ.12 செல​வில் ஒன்​றரை மணி நேரத்​தில் சாய்​ரங்​கில் இருந்து பைரபிக்​குச் செல்ல முடி​யும். இதுவே சாலை மூல​மாக கடக்க 3 மணி நேர​மாகும்​. குறைந்​த​பட்​சம்​ ரூ.60 செல​வாகும்​. இது​வே டாக்​சி​யில்​ செல்​ல கூடு​தல்​ செல​வாகும்​.

தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள்: மழை, வெள்ளம், நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள், மலைகளில் உறுதி தன்மையில்லாத பாறைகளால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து இயற்கை பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா (Geological survey of india) அதிகாரிகள் குழுவினர், ஐஐடி- ரூர்க்கியின் சிவில் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிபுணர்கள் (Civil constructions experts) ஆகியோர் இந்த திட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை கண்காணித்து தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தனர். ரயில் பாதை வரைபடம் தயாரித்தல், சிக்னல், தகவல் தொடர்பு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x