Published : 01 Sep 2025 04:52 AM
Last Updated : 01 Sep 2025 04:52 AM

எல்லையில் பல ஆண்டு காலமாக ஊடுருவலுக்கு உதவிய ‘மனித ஜிபிஎஸ்’ தீவிரவாதி பகு கான் சுட்டுக் கொலை

புதுடெல்லி: வடக்கு காஷ்மீரின் குரேஸ் என்ற எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் கடந்த மாதம் 28-ம் தேதி நடை​பெற்ற துப்​பாக்கி சண்​டை​யில், ‘மனித ஜிபிஎஸ்’ என அழைக்​கப்​படும் ‘பகு கான்’ என்ற தீவிர​வாதி உட்பட 2 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இவர் கடந்த 10 ஆண்​டு​களுக்கு மேலாக பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் ஊடுரு​வலுக்கு உதவிய​வர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

காஷ்மீரின் பந்​திப்​போரா பகு​தி​யில் நசேரா நர் என்ற இடத்​தில் உள்ள எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் தீவிர​வாத ஊடுரு​வல் முயற்சி நடை​பெறு​வதை ராணுவத்​தினர் கண்​டு​பிடித்​தனர். இதையறிந்​ததும் தீவிர​வா​தி​கள் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். ராணுவத்​தினர் நடத்​திய பதில் தாக்​குதலில் 2 தீவிர​வா​தி​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். இதில் ஒரு​வர் பகு கான் என்​பது தெரிய​வந்​தது.

இவர் கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களின் ஊடுரு​வலுக்கு வழி​காட்​டி​யாக செயல்​பட்​ட​வர் என்​பது தெரிந்​தது. இவர் வடக்கு காஷ்மீரின் பந்​திப்​போரா பகு​தி​யைச் சேர்ந்​தவர். கடந்த 1995-ம் ஆண்டு பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீருக்கு தப்​பிச் சென்ற பகு கான், ஹிஸ்​புல் முஜாகிதீன் அமைப்​பில் சேர்ந்து ஆயுத பயிற்சி பெற்​றார். அதன் பின் பல தீவிர​வாத அமைப்​பு​களுக்​காக பணி​யாற்​றி​னார்.

இவருக்கு எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் உள்ள அனைத்து இடங்​கள், மறை​விடங்​கள், ஊடுரு​வல் பாதைகள் ஆகியவை நன்​றாக தெரி​யும். இதனால் இவர் பாகிஸ்​தானில் இருந்து காஷ்மீரில் ஊடுரு​வும் தீவிர​வா​தி​களுக்கு வழி​காட்​டி​யாக 20 ஆண்​டு​களுக்கு மேல் செயல்​பட்டு வந்​துள்​ளார்.

காஷ்மீரில் 100-க்​கும் மேற்​பட்ட ஊடுரு​வல்​களுக்கு பகு கான் உதவிய​வர் என பாது​காப்பு படை​யினர் தெரி​வித்​துள்​ளனர். இவரது இறப்பு எல்​லைக் கட்​டுப்​பாட்​டுப் பகு​தி​யில் நடை​பெற்று வந்த ஊடுரு​வலை குறைக்​கும் என பாது​காப்பு படை​யினர் கூறுகின்​றனர். பகு கான் போன்ற வழி​காட்​டிகள் மூலம் 70 பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் ஜம்மு காஷ்மீரில் இருக்​கலாம் என ராணுவத்​தினர் மதிப்​பிட்​டுள்​ளனர்.

இவர்​கள் பாகிஸ்​தானில் ஆயுத பயிற்சி பெற்​று, சிறு குழுக்​களாக இரிடி​யம் செயற்​கைக்கோள் போன்​கள் மற்​றும் தெர்​மல் இமேஜெரி கருவி​கள் ஆகிய​வற்றை பயன்​படுத்தி யாருக்​கும் தெரி​யாமல் காஷ்மீருக்​குள் நுழைகின்​றனர்.

காஷ்மீரில் இந்​தாண்டு மட்​டும் பஹல்​காம் தாக்​குதல் தீவிர​வா​தி​கள் 3 பேர் உட்பட 16 தீவிர​வா​தி​களை பாது​காப்​பு படை​யினர்​ சுட்​டுக்​ கொன்​றுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x