Published : 30 Aug 2025 07:21 AM
Last Updated : 30 Aug 2025 07:21 AM

எல்லையை கடந்ததால் பாக். சிறையில் இருந்த இந்தியர் மனநல பாதிப்புடன் 5 ஆண்டுக்கு பிறகு விடுதலை

உன்னாவ்: உத்தர பிரதேசம் உன்​னாவ் மாவட்​டம் அக்​ரம்​பூர் சுல்​தான் கேரா கிராமத்​தைச் சேர்ந்​தவர் சூரஜ் பால் (45). இவர் கடந்த 2020-ம் ஆண்டு காணா​மல் போனார். இது தொடர்​பாக அவரது குடும்​பத்​தினர் போலீ​ஸில் புகார் கொடுத்​தனர்.

இந்​நிலை​யில் சூரஜ் பால் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் ஜம்மு காஷ்மீர் எல்​லையை கடந்து பாகிஸ்​தான் சென்​ற​தாக​வும், இதனால் அவர் அங்கு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார் எனவும் சூரஜ் பாலின் உறவினர் ரமேஷுக்​கு, இந்​திய பாது​காப்பு படை​யினர் கடந்த 2021-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் தகவல் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் கடந்​தாண்டு மே மாதம் சூரஜ் பால் விடு​தலை செய்​யப்​பட்டு வாகா எல்​லை​யில் உள்ள இந்​திய வீரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டார். அவர் இந்​தியா வந்​தும் கடந்த ஓராண்​டாக சொந்த ஊர் திரும்​பாமல் பல இடங்​களில் சுற்​றித் திரிந்​துள்​ளார்.

இந்​நிலை​யில் உத்தர பிரதேசம் உன்​னாவ் மாவட்​டத்​தின் லோக் நகர் ரயில்வே கிராஸிங் அரு​கே, சூரஜ் பாலை பார்த்த கிராமத்தினர், அவரது உறவினருக்கு தகவல் தெரி​வித்​தனர். அவர்​கள் வந்து சூரஜ் பாலை பார்த்​த​போது, அவர் மன நிலை பாதிப்​புடன் இருந்​தது தெரிய​வந்​தது. கேட்​கும் கேள்வி​களுக்கு அவரால் சரி​யான பதில்​ அளிக்​க முடிய​வில்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x