Published : 30 Aug 2025 07:36 AM
Last Updated : 30 Aug 2025 07:36 AM
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம், சாந்திநகர் பகுதியில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென தீப்பற்றியது. கூர்மண்ண பாளையத்தில் இருந்து விஜயநகரம் நோக்கிச் சென்ற அந்தப் பேருந்தில் தீ பரவத் தொடங்கியதும், உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஓட்டுநர் இறக்கி விட்டார். அதன் பின்னர் பேருந்தில் தீ மளமளவென பரவியது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பேருந்து முற்றிலுமாக தீயில் கருகி நாசமடைந்தது. பேருந்தை உரிய நேரத்தில் நிறுத்தியதால் அதில் இருந்த சுமார் 40 பயணிகள் உயிர் தப்பினர். இந்த விபத்துக்கு மின்கசிவே காரணம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT