Published : 30 Aug 2025 06:13 AM
Last Updated : 30 Aug 2025 06:13 AM

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள்: விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பு​திய குற்​ற​வியல் சட்​டங்​களுக்கு எதி​ராக நிலு​வை​யில் உள்ள மனுக்​களை விரைந்து விசா​ரிக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. புதிய குற்​ற​வியல் சட்​டங்​களுக்கு எதி​ராக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள அனைத்து வழக்​கு​களை​யும் உச்ச நீதி​மன்​றத்​துக்கு மாற்றி விசா​ரிக்க கோரி தமிழ்​நாடு, புதுச்​சேரி வழக்​கறிஞர்​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அமர்​வில் இந்த மனு மீதான விசா​ரணை நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், ‘‘பு​திய குற்​ற​வியல் சட்​டங்​களின் பெயர்​கள் இந்​தி​யில் இருப்​ப​தால், வழக்​கறிஞர்​கள் சரி​யாக உச்​சரிக்க முடிய​வில்​லை. இ

துதொடர்​பாக மத்​திய அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2024 செப்டம்​பரில் உத்​தர​விட்​டது. அதன்​பிறகு இந்த வழக்கு விசா​ரணைக்கு வரவே இல்​லை’’ என்​றார்.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘பு​திய குற்​ற​வியல் சட்​டங்​களை எதிர்த்து தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களின் முக்​கி​யத்​து​வம்
கரு​தி, அவற்றை 2 நீதிப​தி​கள் அமர்​வில் பட்​டியலிட்டு விரைந்து வி​சா​ரிக்க வேண்​டும்’’ என்று சென்னை உயர் நீதி​மன்​ற தலை​மை நீதிப​திக்​கு உத்​தர​விட்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x